Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 20 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மகளுடன் சுமார் 500 தடவைகள் பாலியல் உறவு கொண்டுவிட்டு அதனூடாக 3 பிள்ளைகளுக்கு அப்பெண்ணை தாயாக்கிய ஜேர்மனிய நபருக்கு ஜேர்மன் நீதிமன்றமொன்று 3 வருடங்களுக்கு குறைவான சிறைத்தண்டனை விதித்துள்ளமை தொடர்பில் பெண்கள் அமைப்புகள் அதிருப்தி தெரவித்துள்ளன.
அடோல்வ் பி எனும் 69 வயதான நபருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நபர் தனது மகளை அப்பெண்ணின் 12 ஆவது வயதிலிருந்து 30 வருடங்களுக்கு மேலாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு உரிமை அமைப்புகள் தெரிவித்திருந்தன.
தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கொடுமைப்படுத்தியதாக அந்நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவருக்கு 14 வருட சிறைத்தண்டனை வழங்க வேண்டுமென வழக்குத் தொடுநர்கள் கோரினர்.
ஆனால், நியூரம்பர்க் நகரிலுள்ள நீதிமன்றமொன்றின் நீதிபதி மேற்படி பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். இது வல்லுறவு அல்ல எனவும் சம்மதத்துடனேயே அந்நபர் உறவுகொண்டுள்ளார் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
தற்போது மேற்படி நபருக்கு இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அடோல்வ்,கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த 34 வருடங்களாக 497 பாலியல் வல்லுறவுக் குற்றங்களைப் புரிந்தாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
இப்போது 46 வயதாகும் அப்பெண் அடோல்வ்வுடனான உறவுமூலம் 3 குழந்தைகளுக்கு தாயானார். அவற்றில் இரு குழந்தைகள் இறந்துவிட்டன.
இந்த உறவு முறைக்கு அவள் மிகவும் விருப்பம் என அடோல்வ் தெரிவித்துள்ளார்.
எனினும் அப்பெண் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், 'இது குறித்து யாரிடமாவது சொன்னால் நான் உன்னை கொன்று விடுவேன். நீ எங்கு சென்றாலும் நான் உன்னை கண்டுபிடித்து கொன்று விடுவேன்' என கூறி தன்னை தனது தந்தை அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அப்பெண் தற்போது ஜேர்மனியில் உள்ள வில்மெர்ஸ்பெச் எனும் கிராமத்தில் தனது தாயுடனும் சகோதர சகோதரிகளுடனும் வசித்து வருகின்றார்.
அப்பெண்ணும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் அடிக்கடி தாக்குதல் மற்றும் அடக்குமுறை குறித்த அச்சத்துடன் வாழ்ந்துள்ளனர்.
மேற்படி தீர்ப்பு குறித்து ஜேர்மனியிலுள்ள, வல்லுறவு நெருக்கடி குழுவொன்றின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், 'இவ்வழக்கின் தீர்ப்பு ஆச்சரியமாகவுள்ளது. நீதிபதி இது என்னவென்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார். அந்த 12 வயது பெண் எவ்வாறான தெரிவுகளை மேற்கொண்டிருக்க முடியும்' என்று கூறியுள்ளார்.
antony Thursday, 22 December 2011 12:46 AM
காம வெறியன்
Reply : 0 0
sattar Monday, 26 December 2011 03:08 AM
நல்ல தந்தையால் இவ்வாறான செயலில் ஈடுபட முடியாது அனால் மதுவுக்கு அடிமையாகியவர்கள்தான் இவ்வாறான செயலில் மிருகத்தனமாக இருக்கிறார்கள்.... தண்டனை போதாது ...... மனித உருவில் மிருகமாகவும் சிலர்...................
Reply : 0 0
Eelan Saturday, 24 December 2011 05:03 AM
he is an innocent. there are people still in the world, even in SL. this is only obvious. but, ......... you see, one or two times, a person may be raped. but 497 times, unbelievable. so........ judgement is wrong, naddame theerpa pathi sollu.
Reply : 0 0
Gowrisankar Saturday, 24 December 2011 02:49 AM
மேற்குலகில் மட்டும் இல்லை எம் இலங்கை திரு நாட்டிலும் இவை நடைபெறுகிறது. ஆனால் பலருக்கு இது இன்னும் தெரியவில்லை. மேற்குலகை குறை கூறுவதை தவிர்த்து எம்மை பற்றி எம் உண்மை நிலை பற்றியும் தேடி பாப்போம்.......
Reply : 0 0
Dilshad Muhammed Friday, 23 December 2011 12:53 AM
தண்டனைகள் குறைவானால் குற்றங்கள் அதிகரிக்கும். மேற்கத்தியர்கள் குற்றவாளிகளை உருவாக்கவே பார்க்கிறார்கள்.
Reply : 0 0
Latha Thursday, 22 December 2011 08:25 PM
மேற்குலகில் மட்டும் இல்லை எம் இலங்கை திரு நாட்டிலும் இவை நடை பெறுகிறது. ஆனால் பலருக்கு இது இன்னும் தெரியவில்லை. மேற்குலகை குறை கூறுவதை தவிர்த்து எம்மை பற்றி எம் உண்மை நிலை பற்றியும் தேடி பாப்போம்.
Reply : 0 0
numa Thursday, 22 December 2011 02:25 PM
இதுதான் அவர்களுடைய நாகரிக வளர்ச்சி இன் அடையாளமாம்.
Reply : 0 0
mazdariyas Thursday, 22 December 2011 02:40 AM
சம்மதத்துடன் சிதைதத்ல் மேற்குலகம் மனித உரிமை மீரியதாக சொல்லும் நண்பர்களையே மேற்குலகம் எவைகளை குற்றம் என்று சொல்லாததால் தான் இவைகள் தொடர்கின்றன.
Reply : 0 0
ummpa Thursday, 22 December 2011 01:04 AM
நாகரிகம் ?
Reply : 0 0
Kethis Wednesday, 21 December 2011 01:41 AM
இவன் மனித வடிவில் மிருகம்
Reply : 0 0
abbas ramees Wednesday, 21 December 2011 10:21 PM
ivan oru manithana?
Reply : 0 0
abbas ramees Wednesday, 21 December 2011 10:16 PM
ivan oru manithana?
Reply : 0 0
baanu Wednesday, 21 December 2011 07:57 PM
இதற்கு தீர்ப்பு அல்குரானில் உள்ளது (ஆனால் இதை மேற்கத்தேயர்கள் ஏற்கமாட்டர்கள்)
Reply : 0 0
RAMKUMAR Wednesday, 21 December 2011 07:57 PM
இதை எப்படி பார்க்கிறீர்கள்? சட்டப்படி பாலியல் குற்றம். வாழ்க்கைபடி இது 100% மகளின் சம்மதத்துடன் நடந்தது. எப்படி தந்தையை குற்றம் சாட்டுவது?
Reply : 0 0
bis Wednesday, 21 December 2011 07:13 PM
ஷ்ஷ்.......... சத்தம் போடாதீர்கள் மேற்குலக மனித உரிமையாளர்கள் கொதித்துப் போவர்கள்! கேவலம்!
Reply : 0 0
jinendran Wednesday, 21 December 2011 06:11 PM
து....... மானம் கெட்டவன் ........
Reply : 0 0
manithan Wednesday, 21 December 2011 06:06 PM
முட்டாள். வல்லுறவைச் சம்மதம் என்கிறான்.
Reply : 0 0
waaqiff Wednesday, 21 December 2011 02:26 PM
இதுதான் மேற்குலக நாகரிகம் ??????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago