Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியிலுள்ள நீதிமன்றமொன்று அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை 30 விநாடி நேரம் சாட்சியமளிக்க வரவழைப்பதற்காக 7000 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.
ஜேர்மனைச் சேர்ந்த பெட்ரிக் பெக்கர் என்ற 20 வயது மாணவனே சாட்சியமளிப்பதற்காக 10,000 மைல்களுக்கு அப்பாலிருந்து அழைத்து வரப்பட்டார்.
அம் மாணவனது தொலைபேசியை திருடிய பெண்ணை அடையாளங் காண்பிப்பதற்காக மேற்படி மாணவன் நேரில் சமூகமளிப்பது அவசியமானது என நீதிபதி கருதியதால் அம்மாணவனை அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.
பட்ரிக் பெக்கரின் கையடக்கத் தொலைபேசி கடந்த 2009 ஆம் ஆண்டு களவாடப்பட்டதாக அவர் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்பின், அவர் இவ்வருடம் சிட்னிக்கு 3 மாத காலஆங்கில மொழிமூல கற்கை நெறியை மேற்கொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜேர்மன் நீதிமன்றமானது சந்தேக நபர் குறித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது பட்ரிக் பெக்கர் கட்டாயமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தொலைபேசி மூலம் அறிவித்தல் விடுத்தது.
'எனக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட மேற்படி பெண் அதிகாரியிடம் குறுகிய கால அவகாசமே இருப்பதால் முதல் வகுப்பிற்கான டிக்கெட் மாத்திரே வாங்க முடியும் எனத் தெரிவித்தேன். அதற்கு அவர் பரவாயில்லை என்றார்.
நான் 30 நிமிடங்கள் மட்டுமே நீதிமன்றத்தில் பேசினேன். பின்பு செலவுத் தொகையை பெற்றுக் கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு திரும்பிவிட்டேன்' என்று அம்மாணவன் ஜேர்மன் செய்தி நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago