2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

3 கால்கள் கொண்ட வாத்தை அபசகுணமாக கருதிய வாடிக்கையாளர்

Kogilavani   / 2011 ஜூலை 05 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வர்த்தக நிலையமொன்றிலிருந்து வாத்து ஒன்றை வாங்கிச்சென்ற ஒருவர் அந்த வாத்திற்கு 3 கால்கள் இருந்ததால் அதனை வர்த்தக நிலையத்தில் மீள ஒப்படைத்து பணத்தை மீள பெற்றுச் சென்ற சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் நானான் நகரிலுள்ள கடையொன்றில் மேற்படி வாத்தை விவசாயி ஒருவர் வாங்கியுள்ளார். அவர் வாத்தை வாங்கியவுடன் மகிழ்ச்சியுடன் சென்றுகொண்டிருந்தார்.

ஆனால், ஒரு மணித்தியாலத்திற்கு பின் அவர் மீண்டும் வந்து வாத்தை திருப்பிக்கொடுத்து பணத்தை தருமாறு கேட்டார்.

அந்த வாத்திற்கு 3 கால்கள் இருந்தமையே இதற்குக் காரணம். வாத்திற்கு மேலதிகமாக ஒரு கால் இருப்பது தனக்கு அபசகுணமாக அமைந்துவிடும் என அவர் கருதினாராம்.

அம் மனிதன் பணத்தை திருப்பிக் கேட்டவுடன் எந்தவித ஆட்சேபனையும் இன்றி பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கு சம்மதித்தேன் என்று கடை உரிமையாளரான சென் ஸியாடோங் தெரிவித்துள்ளார்.

'இப்போது நான் அந்த வாத்தை யாருக்கும் விற்காமல் மக்களின் பார்வைக்காக வைத்துள்ளேன். அதை பார்ப்பதற்கு பலர் வருவதால் எனது வியாபாரத்திற்கு மிக அனுகூலமாக உள்ளது' என அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .