Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியன்மாரில் பெண் குழந்தையொன்று 26 விரல்களுடன் பிறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் அந்த குழந்தையின் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெறவுள்ளது.
லீ யேடி மின் எனும் 16 மாத வயதான இக்குழந்தை 12 கைவிரல்களுடனும் 14 கால்விரல்களுடனும் பிறந்துள்ளது.
இந்தக் குழந்தையின் தாயான பியோ மின் மின் சோய் (வயது 26) இந்தக் குழந்தையை பெற்றெடுத்தமைக் குறித்து மிகவும் பெருமையடைவதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இது ஒரு குறைபாடு அல்ல எனவும் இந்த குழந்தையின் செயற்பாடுகள், சாதாரண குழந்தையின் பிடி ஏனைய குழந்தைகளின் பிடியைவிட வலுவானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
'எனது மகள் பிறந்தபோது, குழந்தை முழுமையான கை கால்களுடன் பிறந்துள்ளதா? என தாதிகளிடம் கேட்டேன். 'குழந்தை தேவைக்கும் அதிகமாகவே கொண்டுள்ளது' என தாதியர்கள் பதிலளித்தனர' என பியோ மின் மின் சோய் கூறுகிறார்.
இவர் தனது குழந்தைக் குறித்து கின்னஸ் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
தற்போது, அதிக விரல்கள் கொண்ட உயிர்வாழும் மனிதர்களாக இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேர் கின்னஸ் சாதனை நூலில் பதிவு செய்யப்பட்டுள்னர். அவர்களுக்கு தலா 12 கை விரல்களும் 13 கால் விரல்களும் உள்ளன.
லீ, யோங்கனின் முன்னாள் தலைநகர் யாங்கூனில் சிறிய பலகை வீடொன்றில் அவளது பெற்றோருடன் வசித்து வருகிறாள்.
இவ்வாறான மேலதிக விரல்களுடன் குழந்தைகள் பிறக்கும் அபூர்வ நிகழ்வுகள் 500 குழந்தைகளில் ஒன்றுக்கு இடம்பெறுகின்றன. இவை மரபணுவுடன தொடர்புபட்டவை என தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
4 hours ago