Gavitha / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயற்கை மனிதனுக்கு வழங்கியுள்ள வளங்களைக் கொண்டே, மனிதன் வாழ்கின்றான் என்பது சூட அறியாத மனிதன், அந்த இயற்கைக்கு மாறாக செயற்பட்டு வருகின்றான்.
பெண்ணொருத்திக்கு தன்னந்தனியாக பாதையில் நடந்து போக முடியாமல் இருப்பது ஒரு புறமிருக்க, தற்போது ஆடு, குதிரை, நாய்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கவேண்டி நிலை ஏற்பட்டு விட்டது.
இப்படித்தான், குதிரை, நாய், ஆடு போன்ற விலங்கினங்களுடன் இயற்கைக்கு மாறாக உறவு வைப்பதற்கு முயன்ற அமெரிக்க நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின், வொஷிங்டன் நகரிலுள்ள பிரதேசமொன்றைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆலன் டர்லான்ட் (56) என்பவரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முயற்சி செய்துள்ளார்.
இவர், தனக்கு குதிரை, நாய், ஆடுகளோடு உறவு வைக்க ஆசையாக உள்ளது என்று ஒரு இணையத்தளத்தில் தெரிவித்;துள்ளார். இந்த செய்தி குற்றப்புனாய்வு பிரிவினருக்குச் சென்றடைந்துள்ளது.
இதையடுத்து, குதிரை பண்ணை உரிமையாளர் போல நடிக்க வைத்து சில அதிகாரிகளை, ஜேம்சை சந்திப்பதற்கா அவருடைய வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சென்ற அதிகாரிகள், தங்களது பண்ணையில் குதிரை, ஆடுகள் அதிகமாக இருப்பதாகவும் அவற்றை உங்களுக்கு உறவு கொள்வதற்காக தந்தால் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்டுள்ளனர்.
குதிரை, ஆடுகளுக்கு பதிலான, தனது செல்லப்பிராணியான நாய்க்குட்டியை உறவு கொள்வதற்காக தருவதாக ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். சம்மதம் என்றால், உங்கள் பண்ணையில் தங்கியிருந்து தினமும் ஒரு விலங்குடன் உறவு வைத்துக்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் ஜேம்ஸ் கூறியுள்ளார்.
மேலும், ஏற்கெனவே பக்கத்து வீட்டுக்காரருடைய நாயுடன் உறவு வைத்திருந்ததாகவும் சில தெரு நாய்களையும் வீட்டுக்கு அழைத்து வந்து உறவு வைத்ததாகவும் ஜேம்ஸ் உண்மைகளை உளறி கொட்டியுள்ளார்.
அனைத்தையும் பதிவு செய்த அதிகாரிகள் கையும், களவுமாக ஜேம்ஸ்சை கைது செய்துள்ளனர். விலங்குகளை துன்புறுத்தியது, துன்புறுத்த முனைந்தது, இயற்கைக்கு மாறான உறவு என பல பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜேம்ஸ் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டுள்ளாராம்.
வாயில்லா ஜீவன்களை இப்படி வதைப்பதற்கு கம்பி எண்ணினால் மாத்திரம் போதுமா.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago