2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

ஒக்ஸ்போட் அகராதியில் Mx என்றால் என்ன?

Gavitha   / 2015 மே 06 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருநங்கைகளுக்கு சட்டரீதியாக, சமூக ரீதியாக, மருத்துவ ரீதியாக பாதுகாப்பளிக்க எவரும் முன்வராத நிலையில் அதற்கான ஒரு தீர்வை ஒக்ஸ்போர்ட் அகராதி முன்வந்துள்ளது.

திருநங்கைகளுக்கு சர்வதேச அளவில் மூன்றாம் பாலினத்துக்கான  அங்கிகாரங்கள் அதிகரித்து வருகின்றது. எனினும் எந்தவொரு விண்ணப்பபடிவத்தையோ அல்லது பெயருக்கு முன் திரு, திருமதி (Mr, Miss, Mrs)  என்று அழைப்பதற்கோ திருநங்கைகளுக்கு எவ்வித அடையாளமும் இருக்கவில்லை. ஏன் கொடுக்கவில்லை என்றுதான் கூறமுடியும்.

அதற்கு பதிலாக விண்ணப்பப்படிவங்களில் வேறு (Other) என்ற சொல்லே குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு ஒரு முடிவாக இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஒக்ஸ்போட் அகராதி நிறுவனம் Mx என்ற அடையாளத்தை அதனது அகராதியின் அடுத்த பதிப்பில் வெளியிடவுள்ளதாம்.

கடந்த 2 வருடங்களாக எந்த ஆரவாரமுமின்றி இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ படிவங்கள் மற்றும் தரவுதளங்களில் (databases)  திருநங்கைகளைக் குறிக்க பயன்படுத்தப்பட்டு வந்த Mx  என்ற சுருக்கப் பெயரே இவ்வாறு அடுத்த பதிப்பில் வெளியாகவுள்ளது.

இங்கிலாந்தில், அரசு துறைகள், வங்கிகள், சில பல்கலைக்கழகங்கள்  என்று பல துறைகளும் தற்போது Mx என்ற சிறப்பு பெயரை ஏற்றுள்ளதாக சண்டே டைம்ஸ் எனும் பத்திரிகையும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X