Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
George / 2015 மார்ச் 15 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாய்கள் மனிதனுக்கு நண்பர்கள் தான் ஆனாலும் மனிதர்களில் சில செயல்கள் நாய்களையும் கோபப்படுத்தி விடுவதுடன் பழிவாங்கும் செயல்பாடுகளுக்கும் தூண்டி விடுகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?
இதெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியப்படும் என்று கூறுபவர்களும் உண்டு. அண்மையில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை எனும் திரைப்படத்தில் நன்றாக பழக்கப்படுத்தப்பட்ட இராணுவ நாய் ஒன்றின் வியத்தகு செயற்பாடுகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.
ஆனால் திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு நிஜ வாழக்கையில் நாய் ஒன்று பழிவாங்கும் செயற்பாட்டில் ஈடுப்பட்ட சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது.
சீனாவில் உள்ள சாங்க்கிங் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது காரில் வெளியே சென்று விட்டு தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது தனது காரை நிறுத்தும் இடத்தில் நாய் ஒன்று படுத்திருப்பதை கண்டார்.
இதனால் கடுப்பான அவர், காரிலிருந்து இறங்கி நாயை எட்டி உதைத்தார். உதை வாங்கிய நாய் ஓட்டம் பிடித்தது. பின்னர் காரை அங்கு நிறுத்திவிட்டு அந்த நபர் வீட்டுக்குள் சென்று விட்டார்.
ஆனால் இவ்வாறான சம்பவங்கள் சாதாரணமாக எல்லா இடங்களிலும் நடக்ககூடியவைதான்.
ஆனால் அதன் பின்னர்தான் நாய்களின் பழிவாங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியது. எட்டி உதைத்தவுடன் வேகமாக ஓடிய அந்த நாய், தனது சக நண்பர்களை, தான் உதை வாங்கிய இடத்துக்கு கூட்டி வந்தது.
தனது நண்பனை தாக்கியவரை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று 4-க்கும் மேற்பட்ட நாய்கள் கார் நிறுத்தும் பகுதிக்கு விரைந்து வந்தன.
ஆனால் அங்கு கார் மட்டும் தான் இருந்துள்ளது எட்டி உதைத்த நபரை காணவில்லை (அவர்தான் வீட்டுக்குள் சென்றுவிட்டாரே) எனினும் ஆத்திரம் குறையாத நாய்கள், அந்த காரை துவம்சம் செய்துள்ளன.
நாய்கள் காரை சுற்றிவந்து தாக்குவதை கண்டு அயலவர் ஒருவர், இந்த காட்சிகளை வீடியோ எடுத்து, நாயை தாக்கிய நபரிடம் காண்பிக்க அவர் அப்படியே ஆடிப்போயுள்ளார்.
காரில் ஏற்பட்ட சேதங்களை பாரத்து, நல்லவேளை நாம் தப்பித்தோம் என எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளாராம் காரின் உரிமையாளர்.
Faizer Tuesday, 17 March 2015 05:17 AM
Nandriulla Mirugam.
Reply : 0 0
Faizer Tuesday, 17 March 2015 05:17 AM
Nandriulla Mirugam.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago