Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்டமிடல் போன்றவை அனைத்தும் நல்ல குணங்களே. ஆனால் அவை அனைத்துமே 'தன்னம்பிக்கை' என்ற அடித்தளத்திலிருந்து தான் உருவாகி வெளி வருகின்றன என்கிறார்கள் அறிஞர்கள்.
தன்னம்பிக்கை என்பது ஓர் உந்து சக்தி. வாழ்வதற்கும் வாழ்வில் உயர்வதற்கும் எல்லோருக்கும் தன்னம்பிக்கை இருக்கிறதா என்றால், இருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் அது போதுமான அளவு இருக்கிறதா என்றால் இல்லை.
நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் தன்னம்பிக்கை நிரம்பப்பெற்றவர்கள் சோர்வு அடைவதில்லை.
அதற்கு ஒரு உதாரணத்தை காட்டுகின்றோம்.
போலியோ குறைபாட்டால் பாதிக்கப்பட்டும் தனது வாழ்க்கையை தானே கொண்டு நடத்தவேண்டும் என்ற முனைப்புடன் மேசன் வேலை செய்து வரும் எம்.மயூரன் (வயது 27) என்பவரை எமக்கு சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
யாழ்ப்பாணம் 1ஆம் குறுக்குத் தெருவில் இவர் வசித்து வருகிறார். மணிக்கட்டுக்கு கீழ் இவரது இரண்டு கைகளும் போலியோ குறைபாட்டால் செயலிழந்துள்ளன. இவருக்கு 4 சகோதரர்கள் உள்ளனர். க.பொ.த சாதாரண தரம் வரையில் கல்விகற்ற இவர், தொடர்ந்து கற்க முடியாமையால், மேசன் வேலையை செய்யத் தொடங்கினார்.
கடந்த வருடம் திருமணம் செய்த இவர், தனது உழைப்பில் தன் குடும்பம் வாழவேண்டும் என்ற நோக்குடன் மேசன் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றார். இரண்டு கைகளும் சீராக இருப்பவர்களே மேசன் வேலை செய்வதற்கு சிரமப்படும் போது, இவர் இரண்டு கைகளும் செயலிழந்த நிலையிலும் சிறப்பாக வேலை செய்து வருகின்றார்.
துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன சிறப்பாக ஓடக்கூடியவராகவும் இவர் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உடல் உறுப்புகள் அனைத்தும் சிறப்பான நிலையில் இருக்கின்றவர்கள்கூட வாழ்கையை எண்ணி விரக்கியடையும் நிலையில், உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் மயூரன் போன்றவர்கள் சமூகத்தின் முன்மாதிரி என்றால் அது மிகையாகாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
6 hours ago
21 Apr 2025
21 Apr 2025