2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நெற்றியில் ஆணுறுப்புடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி

Gavitha   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


பன்றிகள், இறைச்சிக்காவும் தோலுக்காகவும் மாத்திரம் பல நாடுகளில், பண்ணைகளிலும் வீடுகளிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.


இவ்வாறு இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட பன்றியொன்று ஈன்ற குட்டி, மனித முகத்துடனும் நெற்றியில் ஆணுறுப்புடனும் பிறந்த சம்பவம் தொடர்பான செய்திகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.


சீனாவின் நன்னிங் எனும் நகரிலுள்ள பண்ணையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


தாவோ லு என்பவர் பன்றி பண்ணையை நடத்தி வருகின்றார். அந்த  பண்ணையில் உள்ள பன்றியொன்று 19 குட்டிகளை ஈன்றுள்ளது.


அனைத்து குட்டிகளும் தாயிடம் பால் அருந்திக்கொண்டிருக்கையில், ஒரு குட்டியை மாத்திரம் தாய் பன்றி பால் கொடுக்காது நிராகரித்துள்ளது.


இதனை அவதானித்த பண்ணை பணியாளர் வு குங், நிராகரிக்கப்பட்ட பன்றியை பரிசோதிப்பதற்காக தூக்கியுள்ளார். இதன்போது, பன்றிக்குட்டியின் உடல், பன்றியின் உருவத்தையும் மனித முகத்தையும் கொண்டிருந்துள்ளது. இதேவேளை, அதன் நெற்றியில் ஆணுறுப்பு ஒன்றும் இருந்துள்ளது.


தங்களது பண்ணையில் அதிசய பன்றியொன்று பிறந்துள்ளது என்று பண்ணை உரிமையாளர், அதனை புகைப்படமாக்கி இணையத்திளத்திலும்; பதிவேற்றம் செய்துள்ளார். இதனையடுத்து பண்ணை உரிமையாளருக்கு அதிசய பன்றிக்குட்டியை விலைக்கு தருமாறு கோரி பல தொடர்புகளும் வந்துள்ளது. எனினும் தாய் பன்றி பால் கொடுக்க மறுத்தால், அதிசய பன்றி இறந்துவிட்டதாம்.


தற்போது அந்த பன்றிக்குட்டியின் சடலம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X