2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சார்லி சாப்ளினினை காணவில்லை

Gavitha   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரையுலகுக்கு நகைச்சுவை பாத்திரத்தை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் சார்லி சாப்ளின். இவரை திரையில் பார்க்கும் போதே துன்பங்கள் நீங்கி, உள்ளங்கள் சிரிக்குமளவில் தன் நகைச்சுவையால் அனைவரையும் கவர்வார். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.


இவ்வாறு புகழப்படும் சார்லி சாப்ளின் 1929ஆம் ஆண்டுக்கான கௌரவ ஒஸ்கார் சிலை காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


சுவிட்ஸர்லாந்தில் சார்லி சாப்ளினின் பெயரை பாதுகாப்பதற்காகவும் அவரது உருவம் மற்றும் உடமைகளை பாதுகாப்பதற்காகவும் சாப்ளின் சங்கம் ஒன்று உள்ளது.


இந்த அமைப்பிலிருந்தே இந்த சிலை காணாமல் போயுள்ளதாம். சிலை காணாமல் போனது குறித்து சங்கத்தின் தலைவர் கேட் வாய்மொழி மூலம் தெரிவிக்காவிட்டாலும் மின்னஞசல் மூலம் தெரிவித்துள்ளார்.


'சிலை எவ்வாறு திருடப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் இவ்வாறான பொக்கிஷமொன்று காணாமல் போனதை நினைத்து எனது சங்க உறுப்பினர்கள் தலை குனிந்து மன்னிப்பு கோருகின்றோம். இந்த சிலையை மீட்டுத்தரும் பொறுப்பை பொலிஸாரிடம் ஒப்படைக்கின்றோம்' என்று அனைத்து ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அவர்கள் அறிவித்துள்ளனர்.


இதேபோல பிரிட்டிஸ் ஸ்டார் என்ற அமைப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த பல பேனாக்களும் காணாமல் போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு காணாமல் போன ஒரு பேனாவின் விலை 80,000 யூரோ பெறுமதியானவையாம்.
இவ்வாறு பாதுகாக்கப்படும் பொருட்களை திருடுவது யார் என்பது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாவும் காணாமல் போன சிலையை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .