2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பணத்தால் உயிர்பிழைத்த நபர்

Gavitha   / 2015 ஜனவரி 13 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவீனமயாகிக் கொண்டுவரும்  உலகில் அனைவரும் அலைந்து அலைந்து தடுவது பணத்தைத்தான். பணம் வாழ்வதற்கு மட்டுமல்ல, அதற்கும் மேலாகஉதவி செய்கின்றது. ஒரு ரூபாய் கூட இறந்தவுடன் நெற்றியில் வைக்க உதவும் என்று கூறுவதுண்டு.

அவ்வாறிருக்கையில் கோமா நிலையிலிருந்த ஒருவரை, பணத்தை காட்டி பிழைக்க வைத்த சம்பவம் தொடர்பான செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

சீனாவைச் சேர்ந்த ஜியோலீஎன்ற 30 வயதுடைய வர்த்தகரொருவர், அவரது வர்த்தகத்தை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக,ஒருவாரம் தூக்கமின்றி இணையத்தளத்திலேயே காலத்தை கழித்துள்ளார்.

திடீரென மயங்கி விழுந்த அவர் கோமாநிலையை அடைந்துள்ளார். ஒரு வருடகாலமாக, மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றமில்லை.

இதனால், அவருக்கு மிகவும் பிடித்தமானபொருள் அல்லதுநேசிக்கும் பொருள் எதுவென, நோயாளியின் உறவினர்களிடம் மருத்துவர்கள் கேட்டுள்ளனர்.

அனைவரும் ஒரேவார்த்தையில் பணம் என்று கூறியுள்ளனர். எனவே, பணத்தைக் கொண்டு ஜியோவுக்கு சிகிச்சை அளிக்கமருத்துவர்கள் முடிவுசெய்தனர்.

அதன்படி, 100 யென் நோட்டை ஜியோவின் மூக்குக்கு அருகில் கொண்டு சென்று அதன் வாசத்தை நுகரச் செய்துள்ளனர். மேலும், அந்நோட்டை கசக்கி அதன் சத்தத்தையும் ஜியோவைக் கேட்கச் செய்துள்ளனர்.

என்ன ஆச்சரியம்! ஜியோவில் உடலில் அசைவு தெரிந்துள்ளது. கைகள் மேலெழும்பி ரூபாய் நோட்டைப் பறிக்க முயற்சித்துள்ளது. கண் இமைகளிலும் லேசான அசைவுஏற்பட்டுள்ளது.

30 ஆண்டு கால மருத்துவ சேவையில் இப்படி ஒரு அதிசயத்தை இப்போது தான் முதன் முறையாக பார்க்கிறேன் என்றும் அவருக்கு மேலும் சிகிச்சைகள் அளிக்கவேண்டும் என்றும் ஜிவோவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .