2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இந்தியாவில் மேயராக தெரிவான முதலாவது திருநங்கை

Gavitha   / 2015 ஜனவரி 06 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வுலகில் பிறந்த நாள் முதல் ஆண்களாகவோ, பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூகத்தில் எவ்வித மதிப்புமில்லாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு, வாழ்க்கையின் அர்த்தம் புரியாத அவலத்தில் வாழ்ந்து வருபவர்களே திருநங்கைகள் என்று கூறுவது மரபாக மாறிவிட்டது.

எவ்வாறாயினும் அவர்களையும் சாதாரண மனிதர்களாக மதிக்க வேண்டும் என்று பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்தியாவில் முதல் முறையாக திருநங்கையொருவர் மேயராக தெரிவாகியுள்ளார்.

இந்தியாவில் அண்மையில் மாநகர சபை தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில், மது கின்னார் (வயது 35) என்ற திருநங்கை போட்டியிட்டு 4,500 மேலதிகமாக வாக்குகளால்  வெற்றிபெற்றுள்ளார்.

இவர், மத்திய இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் ரய்கார் நகரத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

 'புகையிரதங்களில் பாட்டு பாடி நடனமாடும் என்னை மக்கள் தெரிவு செய்திருப்பது என்னை பூரிப்படைய வைக்கின்றது. என்னை நம்பியே மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். அவர்களது பாசமும் ஆசிர்வாதமுமே என்னை வெற்றியடைய வைத்தது. என்னால் இயன்ற வரை எனக்கு வாக்களித்த மக்களின் கனவுகளை நிறைவேற்றுவேன்.

என்னை போன்று ஆயிரக்கணக்காக திருநங்கைகள் இந்தியாவில் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரின் மீதும் பாகுபாடு காண்பிக்கப்படுகின்றது. இதனாலேயே நான் தேர்தலுக்கு போட்டியிட சம்மதித்ததேன்' என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் திருநங்கைளும் சமூகத்தில் சமமாக மதிக்கப்படவேண்டும் என்று இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .