2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

திருமண பந்தத்தில் இணைந்த மூதாட்டிகள்

Gavitha   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் சட்டம் வெளிநாடுகளில் இருப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் 91 வயதுடைய மூதாட்டியை 90 வயது மூதாட்டியொருவர் திருமணம் செய்த சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்டீர்களா?

ஆம், அமெரிக்காவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விவியன் பொயெக் எனும் 91 வயதுடையவரும் எலைஸ் டப்ஸ் எனும் 90 வயதுடைய மூதாட்டியுமே இவ்வாறு திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் லோவா மாநிலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு  ஓரின திருமணத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. எனினும் மேற்படி இரு மூதாட்டிகளும் 1942ஆம் ஆண்டிலிருந்தே தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

இத்தனை வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென தீர்மானித்துள்ளனர்.
இவர்கள் கடந்த 72 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். 

வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள் வந்தபோதும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்தோம். ஒரு நாளேனும் பிரிய வேண்டும் என்று எண்ணியதில்லை. இது நீண்ட நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றிருக்க வேண்டிய திருமணம் என்று புது ஜோடிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .