2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மனிதனின் மீசையை மிஞ்சிய பூனையின் மீசை

Gavitha   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிறிய துளைகளில் சென்று சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே இறைவன் பூனைக்கு மீசையை படைத்தான் என்பது ஒரு கதை. ஆனால், இங்கு ஒரு பூனை தனது நீண்ட, அழகிய மீசையினால் மனிதனின் மீசையையும் மிஞ்சிவிட்டது.

ஆம், ஒரியண்டல் என்ற இனத்தைச் சேர்ந்த ஸ்டெக் என்றழைக்கப்படும் பூனைக்குட்டியொன்று சாதாரண மனிதனுக்குரிய மீசையுடன் விளங்குகிறது. ஆண்களுக்கு எப்படி உதட்டுக்கு மேலே மீசை இருக்குமோ, அதேபோல 10 மாத வயதுடைய இப்பூனைக்குட்டிக்கும் உதட்டுக்கு மேலே கறுப்பு நிறத்தில் மீசை உள்ளது. இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்பூனைக்குட்டியின் படத்தை இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது. இதனை இதுவரை சுமார் 600,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

அதேபோல் இப்படத்தை டுவிட்டரில் 1,000க்கும் மேற்பட்டோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

எனது பூனை பிறக்கும்போது இவ்வாறான அடையாளங்கள் காணப்படவில்லை. வளர வளரதான் அதனது மீசை வெளிப்பட்டது. மீசை,  பூனைக்கு வர்ணம் பூசியதை போன்று அழகாக உள்ளது என பூனையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .