2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மனைவியின் மறைவுக்கு இழப்பீடு கோரிய கணவன்

Gavitha   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


விமானத்தில் இருந்து வெளியேறுமாறு கூறியதாலேயே தனது மனைவி உயிரிழந்தார் என நபரொருவர் மூன்று விமான நிறுவனங்களின் மீது, வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தனது மனைவியின் இழப்புக்கு நட்டஈடாக 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்று தருமாறும் குறித்த நபர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வில்மா சோல்டெஸ் எனும் பெண் 185 கிலோகிராம் உடல் எடை உடையவர்.  இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஹங்கேரியாவில் அமைந்துள்ள அவருடைய விடுமுறை இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நியூயோர்க்கில் உள்ள வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வந்துள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள பிராங்ஸ் எனும் இடத்தை வசிப்பிடமாக கொண்ட இவர் தனது கணவருடன் விடுமுறைக்காக ஹங்கேரியாவுக்கு வந்தபோது, விமானத்தில் இருக்கையின் அளவு இவருக்கு போதியதாக இல்லாமையினால் இரண்டு இருக்கைகளை இவருக்கும் ஒரு இருக்கை குறித்த பெண்ணின் கணவருக்குமாக பதிவு செய்து பயணித்துள்ளனர்.

இதன்பின்னர், மீண்டும் நியூயோர்க்குக்கு பயணிப்பதற்காக விமான பதிவுகளை மேற்கொள்ள விமான நிறுவனங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தியபோது, குறித்த பெண்ணின் நிறையும் உடலின் பருமனும் அதிகம் என்பதனால் இவர்களுடைய பதிவினை அனைத்து விமான நிலையங்களும் நிராகரித்துள்ளன.

எனினும் இறுதியாக விமானமொன்றில் இருக்கையொன்றை பெற்றுக்கொண்ட போதும், குறித்த பெண் தனது சக்கர கதிரையில் இருந்து விமானத்தின் இருக்கையில் அமருவதற்கு தடுமாறியதை காரணமாக கூறி, அந்த பெண்ணை வெளியேருமாறு விமானி கூறியுள்ளார்.

அதனையடுத்து ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, அந்த பெண் தனது விடுமுறை இல்லத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, தனது மனைவியின் மரணத்துக்கு குறித்த விமான சேவை நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும், தனது மனைவியின் மறைவினால் ஏற்பட்ட வேதனையின் காரணமாகவே தான் விமான நிறுவனங்கள் மீது 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்ததாக அவரது கணவர் ஜெனோஸ் தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • easwaran Monday, 15 September 2014 08:49 PM

    super appu, oru pennai sagadizatuku idu patadu innu vera ketrukalaam.
    oru flight la koda seat illama ponathukku government
    enna pannapogudu...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .