2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

அழகியை மணக்கும் வீராங்கனை

Gavitha   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


மகளிர் டென்னிஸ் ஜாம்பவானாக திகழ்ந்த மார்டினா நவ்ரத்திலோவா ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் அழகியை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

57 வயதாகும் நவ்ரத்திலோவா எடுத்துள்ள இந்த முடிவு சிலரை ஆச்சரியத்திலும், சிலரை ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மகளிர் டென்னிசில் உலகின் நம்பர்-1 வீராங்கனையாக விளங்கிய மார்டினா நவ்ரத்திலோவா, ஓரினச்சேர்க்கை பிரியையாவார்.

ஜூடி நெல்சன் என்ற பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மார்டினா நவ்ரத்திலோவா, 1991இல் அவரை விட்டு பிரிந்தார்.

தற்போது மார்டினா நவ்ரத்திலோவாவுக்கு 57 வயதாகின்றது. மீசை நரைத்தாலும், ஆசை நரைக்காது என்ற கதையாக, மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய மார்டினா நவ்ரத்திலோவா முடிவு செய்துள்ளார். 

ரஷ்யாவின் முன்னாள் அழகியான ஜூலியா லெமிகோவை, மார்டினா நவ்ரத்திலோவா திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். ஜூலியாவுக்கு தற்போது 42 வயதாகிறது, தொழிலதிபராகவும் உள்ளார்.

இவ்விருவரும் கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார்கள். இவர்களது நிச்சயதார்த்தம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் அரை இறுதி ஆட்டத்தின் போது ஸ்டேடியத்தில் வைத்து நடத்தப்பட்டது.

டென்னிஸ் போட்டி நடந்து கொண்டிருந்தபோது, நான் ஜூலியாவை திருமணம் செய்ய போகின்றேன். இதில் உனக்கு விருப்பமா என்று, நவ்ரத்திலோவா பொது இடத்தில் வைத்து கேட்க வெட்கப்பட்டுக் கொண்டே ஜூலியாவும் சம்மதம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து வைர மோதிரத்தை நிச்சயதார்த்த அடையாளமாக ஜூலியாவின் விரலில் அணிவித்தார் நவ்ரத்திலோவா.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி கிடையாது. இதனால் இருவரும் மியாமியில் தங்கள் திருமணத்தை விரைவில் நடத்தலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர். (தட்ஸ் தமிழ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .