2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

'சிலந்தி நாய்' ஜாக்கிரதை

George   / 2014 செப்டெம்பர் 08 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிறிய சிலந்தியை கண்டாலே சிலர் அலறி கொண்டு ஓடி விடுவர். அப்படியிருக்கையில் 8 கால்களைக் கொண்ட சிலந்தி நாயை பார்த்தால்...

இவ்வாறு எட்டுக் கால்களைக் கொண்ட சிலந்தி நாயை கண்டு மக்கள் அலறி ஓடிய சம்பவம் போலாந்து நாட்டில் பதிவாகியுள்ளது.

பயப்படாதீங்க! உண்மையில் அது சிலந்தி போல வேடமிட்ட நாயாம் (அப்பாடா!)

சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

போலந்து நாட்டை சேர்ந்த நகைச்சுவை நடிகரான சில்வஸ்டர் வார்டேகா நகைச்சுவைக்காக வினோதமாக  ஏதாவது செய்வது வழக்கம்.

இவர் தனது செல்ல நாயான சிகாவை வைத்து சற்று வித்தியாசமாக நகைச்சுவை செய்ய நினைத்துள்ளார்.

நீண்ட யோசனைக்கு பிறகு, தனது நாய்க்கு எட்டு கால் சிலந்தி உடை தைத்து அணிவித்தார். இப்போது, நாய், பார்ப்பதற்கு பிரமாண்ட சிலந்தி போல காட்சியளித்தது.

சிலந்தி நாயை தயாரித்த அவர், தானும் விநோதமான முகமூடியை அணிந்து கொண்டுள்ளார்.

அதனையடுத்து, வீதியில் இரவு நேரத்தில் தனியாக நடந்து வருபவர்களை நோக்கி தனது சிலந்தி நாயை ஓட விட்டுள்ளார்.

இதனை பார்த்த மக்கள் ஏதோ இராட்சத சிலந்தி ஓடி வருவதாக நினைத்து அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.

அத்தோடு விட்டாரா வார்டேகா, மக்கள் அதிகமாக செல்லாத, இருளடைந்த இடங்களில் சிலந்தி வலையில் மனித உறுப்புகள் தொங்குவது போல ஏற்பாடு செய்து வைத்துள்ளார்.

சிலந்தி வலையில் மனித உறுப்புகள் தொங்குவதை கண்டு பலர் பயந்து ஓடுகையில் அவர்களை நோக்கி தனது சிலந்தி நாளை ஓட விட்டுள்ளார்.

இந்த சிலந்தி நாயை கண்ட ஆண்களே பின்னங்கால் பிடறியில் படுமளவுக்கு பயந்து ஓடுகையில், பெண்களை பற்றி சொல்லவா வேண்டும்.. சிலர் அதிர்ச்சியில் மிரண்டனர்.

ஒரு லிப்டில், நபர் ஒருவர் மீது சிலந்தி நாய் ஏறி நின்று அவரை சாப்பிடுவது போன்ற காட்சியை கண்டு, லிப்டில் செல்ல வந்த இரண்டு பெண்கள், உசைன் போல்டை தோற்கடிப்பது போல ஓடியதை என்னவென்பது!

சிலந்தி நாய் மக்களை மிரட்டிய காட்சிகள் அடங்கிய காணொளி, யூ டியூப் இணையத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(ஜோ)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .