2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மகன் பிறந்ததை ஆப்பிள் ஸ்டைலில் விளம்பரப்படுத்திய முன்னாள் ஊழியர்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்த விடயத்தை வித்தியாசமாக இணையத்தில் விளம்பரப் படுத்தியுள்ளார். இந்த விளம்பரம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆண்ட்ரியாஸ் கிளெய்ன்க் என்ற நபரே இவ்வாறு விளம்பரப்படுத்தியுள்ளார்.

கிளெய்னுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு மகன் பிறந்ததை தனது நண்பர்களுக்குத் தெரியப்படுத்த தனியாக வெப்சைட் ஒன்றை உருவாக்கினார் கிளெய்க்.

அதில் தனது மகன் குறித்து அவர் கூறியுள்ளதாவது,

புதிய சிறிய ரகம் ஜோனாதன் அறிமுகம். ஜோனாதன் (2014 வருட படைப்பு) 20 அங்குல நீளமுள்ள ஒரே உடல் அமைப்பு கொண்ட திடமான அழகினை உடையது.

ஒழுங்கான 10 விரல்கள் நேர்த்தியான பன்முக தொடுதல் அனுபவம் தர கூடியது.

கூடுதலாக, ஒன்று அல்ல பார்வை திறன் கொண்ட இரு கெமராக்களை கொண்டது. ஒவ்வொன்றும் ரெடினா ரெசல்யூசனில் திகைக்க வைக்கும் படங்களை தருவது.

இரு மைக்ரோபோன்கள் இரு புறமும் அமைந்து ஒவ்வொரு சத்தத்தையும் கேட்கும் திறன் கொண்டது.

நடுவில் அமைந்துள்ள ஸ்பீக்கர் உங்களை ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டு சென்று விடும். அதுவும் அதிகபட்சமாக 120 டெசிபல் அளவுள்ள சத்தத்தை அதிகமாக வெளியிடும் திறன் கொண்டது.

இந்த படைப்பு 5 வேறுபட்ட சுவையை அறிய தக்கது. ஆனபோதும் தற்பொழுது ஒரு சுவையை (பால்) மட்டும் அறிய தக்கதாக உள்ளது. இது மாற்றத்திற்கு உட்பட்டது' என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .