2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

விடைபெற்ற விந்தை மனிதன்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகின் மிக உயரமான மனிதர் தனது 44 வயதில் உயிரிழந்துள்ளார்.

பொடோலியன்ட்சியின் உக்ரைன் கிராமத்தைச் சேர்ந்த 8 அடி நான்கு அங்குலம் உயரமுடைய இவர், உலகிலேயே மிக உயரமான நபர் என்ற சாதனையை தனதாக்கிகொண்டிருந்தார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் க்ரோச் எனும் பிரபல கால்ப்பந்தாட்ட வீரரை விடவும் இவர், 21 அங்குலம் உயரமானவராவர் என்றும் கூறப்படுகின்றது.

இவர், இறப்பதற்கு முன்னர் கின்னஸ் சாதனை அலுவலக அதிகாரிகளுக்கு செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.

ஷநான் விவசாயம் செய்கின்றேன். என்னை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிய வேண்டும் என்ற எண்ணம் சிறிதேனும் இல்லை. நான் என்ன பாவம் செய்தேன் என்று தெரியவில்லை. இவ்வாறு எனது உடல் அமைந்திருப்பது எனக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட தண்டனை என்றே நான் எண்ணுகின்றேன்.

எனக்கும் சாதாரண மனிதனை போல் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. ஆனாலும் எனது உயரம் என்னை தடுக்கின்றது. இவ்வுலகம் உடலை சிறியதாக வைத்திருப்பவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

என்னை பார்ப்பவர்கள் என்னை ஒரு வேற்றுலக மனிதனை போலவே பார்க்கின்றார்கள். எனக்கென்று தனியொரு படுக்கை கிடையாது. பில்லியட்ஸ் விளையாடும் மேசையில் தான் உறங்குகின்றேன்.

எனக்கு திருமணம் முடிக்கவும் இஷ்டம் இல்லை. நான் அவதிப்படுவது போல எதற்காக எனது கஷ்டங்களை எனது மனைவியின் தலையில் திணிக்க விரும்பவில்லை என மிகவும் மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இவருக்கு 12 வயது இருக்கும் போது ஏற்பட்ட நோயின் காரணமாக இவரது ஹோர்மோன்கள் அதிகமாக சுரக்க ஆரம்பித்தது. இதனால் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இவரது உயரம் அதிகரித்து வந்துள்ளது.  இவருடைய பாதணிகள் அந்நாட்டு அளவின் படி 27  ஆகும்.

இந்நிலையில் மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக இவர், ஞாயிற்றுக்கிழமை (24)  உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பெருமிதத்தை விரும்பாத இலகிய எண்ணம் கொண்ட இவர். தனது உயரத்தை அளக்கக்கூட மிகவும் வெட்க்கப்படுவார். அனைவரிடமும் மிகவும் ஜாக்கிரதையாக, தன்னலமில்லாமல், தூய்மையாக நடந்துக்கொள்வார். இவர், ஒரு விந்தை மனிதன் என்று கின்னஸ் சாதனை அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .