2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கர்ப்பிணிக்கு நடுவானில் பிரசவ வலி: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானத்தில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு நடுவானில் பிரசவ வலி ஏற்பட விமானத்தை அவசரமாக தரையிறக்கிய சம்பவம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

அமஸ்டர்டமிலிருந்து அட்லான்டாவுக்கு பயணித்த விமானமே இவ்வாறு அயர்லாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மேற்படி விமானத்தில் 230 பயணிகள் பயணதித்துள்ளனர். விமானம் புறப்பட்டு சில மணித்தியாலங்களில் அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இப்பெண்ணின் நிலை

மையை பார்த்து பயணிகள் அச்சமடைந்துள்ளதுடன் விமானத்திலே பெண்ணுக்கு பிரசவம் நடந்துவிடுமென சந்தேகித்துள்ளனர்.

இந்நிலையில் விமானியின் துணிகரச் செயற்பாடு காரணமாக விமானம் செனன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

உடனடியாக கர்ப்பிணி  அருகிலுள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அம்பியுலன்ஸ் வண்டியில் கொண்டு செல்லப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் அப்பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளதாக உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .