2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

உயிருக்காக போராடும் சிசு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


தாயின் கருவில் இருக்கும்போதே சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த சிசுவை, பிறந்து 3 மணித்தியாலங்களின் பின்னர் சத்திரசிகிச்சையின் ஊடாக சுவாசிக்க செய்து மருத்துவர்கள் மருத்துவ உலகில் சாதனை படைத்துள்ளனர்.

சிசுவானது கருவில் இருக்கும் போதே இதய குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தனது சிசுவின் நாடித்துடிப்பிலும் சுவாசத்திலும் பிரச்சினையொன்று இருப்பதாக தெரிகின்றது என சிசுவின் தாய் வைத்தியர்களுக்கு தெரிவித்துள்ளார்.

சிசு கருவில் இருக்கும்போது 20 கிழமைகள் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வைத்தியர்கள் தீவிரமான சோதனையை மேற்கொண்ட பின்னரே சிசு எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர்.

சிசுவின் உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதுடன் சிசுவின் இதயத்தில் உள்ள இரத்த நாளங்கள் தவறான முறையில் உருவாகியுள்ளதாகவும்  இதனால் உடலுக்கு செல்லும் ஒட்சிசன் நின்றுவிடும் என்றும் வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிறந்தவுடன் சிசுவுக்கு சுவாசிக்கும் தன்மை இருக்காது, சிசுவை காப்பாற்ற வேண்டுமாயின் சத்திரசிகிச்சை செய்வது அவசியம் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளதுடன் , குழந்தை பிறந்தவுடன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிசுவின் சுவாசப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

எனது வாழ்க்கையில் மிகவும் நீண்ட நாளாக இதனை கருதுகிறேன். எனது சிசுவின் இதயம் மிகவும் சிறியது. ஒரு ஸ்டோபெரி பழத்தைபோன்றே அது இருந்தது. மிக நீண்ட உயிர்போராட்டத்தின் பின் எனது சிசு ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது' என்று சிசுவின் தாயார் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .