2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சுழலும் படுக்கையறை கொண்ட மாளிகை வாடகைக்கு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரித்தானியாவில் சுழலும் படுக்கையறைகளை கொண்ட மிக பிராமண்டமான வீடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில், போடோபெலொ நகரில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இவ்வீட்டில் நான்கு படுக்கையறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மாஸ்டர் படுக்கையறையானது 360 பாகைக்கு சுழலக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் உறங்குவர்கள் நான்கு பக்கமும் சுழன்றபடியே உறங்க முடியும்.

வானவில் வர்ணங்களை கொண்டு இவ்வீட்டின் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டுகள் சாதாரண படிக்கட்டுக்கள் போன்றில்லாமல் சுழலும் படிக்கட்டுக்களாக அமைக்கப்பட்டுள்ளன.  

கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்பட்படுள்ளது. எ.பி.ரோகர்ஸ் எனும் கட்டட வடிவமைப்பாளரே இவ்வீட்டை நிர்மாணித்துள்ளார்.

இம்மாளிகை மாதமொன்றுக்கு 15,000 ஸ்ரேலிங் பவுண்ட் என்ற அடிப்டையிலும் கிழமையொன்றுக்கு 3,500 பவுண்ட என்ற அடிப்படையிலும் வாடகைக்கு விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .