2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

காரில் சிக்கிய கோலா

Gavitha   / 2014 ஜூலை 29 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐந்தறிவு கொண்டு காட்டில் வாழும் மிருகங்கள் வாகனங்களை கண்டாலே பயந்து ஓடும் காலம் மாறி மனிதனின் ஆறறிவையே மிஞ்சிவிடும் அளவிற்கு மிருகங்கள் மிருகங்கள் நடந்து கொள்கின்றன.

அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் அதிகமாக காணப்படும் கோலா எனப்படும் சிறிய விலங்கு ஒன்று சுமார் 88 கிலோமீற்றர் தூரம் வரை கார் ஒன்றின் அடிப்பாகத்தில் தொங்கிக்கொண்டு பயணித்து உயிர்பிழைத்த சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

பஞ்சு போன்ற தோலையும் சாதுவான குணத்தையும் கொண்ட இவ்விலங்கிற்கு நான்கு வயதாகின்றது. அவுஸ்திரேலியாவின் மெரிபோரோவ் எனும் பிரதேசத்தில் இருந்து, மிகவும் பிரசித்தமான மாநிலமான குயீன்ஸ்லேன்ட் எனும் இடத்திற்கு சென்ற கார் ஒன்றிலேயே இவ்வாறு தொங்கிக்கொண்டு பிரயாணித்துள்ளது.

காரை செலுத்தி வந்தவர்கள் குயின்ஸ்லேன்ட், ஜிம்பை எனும் இடத்தில் காரை பெற்றோல் நிரப்புவதற்காக நிறுத்திய போதே கோலா காரின் அடிப்பாகத்தில் தொங்கிக்கொண்டிருப்பதை அவர்களுடன் இன்னொரு பயணியும் வந்துள்ளதை அவதானித்துள்ளனர்.

உறைந்து போன கார் செலுத்துனர்கள், உடனடியாக அவுஸ்திரேலியா மிருகக்காட்சி சாலைகளின் வனவிலங்கு வைத்தியசாலைக்கு தொடர்பினை ஏற்படித்தி இது குறித்து அறிவித்துள்ளர்.

சிகிச்சைகள் நிறைவடைந்த பின்னர் கோலாவின் உடல்நிலை கவலைக்குரியதகா இல்லை என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளர்.

மேலும் இவ்வாறான மிருகம் இப்படி காருக்கு அடிப்பாகத்தில் பிரயாணித்து சிறு சிறு காயங்களுடன் உயிர்பிழைத்தது ஆச்சரியத்துக்குரிய விடயம். அதுக்கென்று ஒரு அதிஷ்டம்  இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .