2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஸ்பைடர் மேன் கைது

George   / 2014 ஜூலை 29 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பைடர் மேன் (சிலந்தி மனிதன்) கைது செய்யப்பட்டுள்ளார். என்ன அதிர்ச்சியாக உள்ளதா? ஆச்சரியப்படாதீங்க இத கேளுங்க. ஜூனியர் பிஷப் என்ற 25 வயது நபர் ஒருவர், ஸ்பைடர் மேன் போல் உடையணிந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் சுற்றுலாப்பயணி ஒருவரிடம் பணம் அதிகம் கேட்டுள்ளார் இதனைடுத்து அவரை தட்டிக் கேட்ட பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த ஸ்பைடர் மேனை. ஸ்ஸ்ஸ்.. சாரி அந்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கடந்த சனிக்கிழமை (26) நியூயோர்க் நகரிலுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் ஸ்பைடர் மேன் போல் உடையணிந்த இந்த நபர் சுற்றுலாப்பயணிகள் இருவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளதுடன் அவர்களில் சுற்றுலாப்பயணி டொலர்; ஒன்றை அவருக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

எனினும், அதனை ஸ்பைடர் மேன் அதனை வாங்க மறுத்ததோடு, தான் 5 டொலர், 10 டொலர், 20 டொலருக்குக் கீழ் வாங்குவதில்லை என்று கூறி குறித்த சுற்றுலாப்பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதத்தை அருகில் இருந்து பார்த்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணிடம் உங்களுக்கு விருப்பப்பட்ட தொகையை கொடுங்கள் என்று கூறியதால்  ஆத்திரமடைந்த ஸ்பைடர் மேன் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ என்று அந்த பொலிஸ் அதிகாரியிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த பொலிஸ் அதிகாரி ஸ்பைடர் மேனிடம் உன் அடையாள அட்டையை காட்டு என கேட்க அவரிடம் எதுவும்(?) இல்லாத காரணத்தினால் கைது செய்யப்பட்டார். அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஸ்பைடர் மேன் பொலிஸ் அதிகாரி முகத்தில் ஒரு குத்து விட்டுள்ளார். அவரது குத்தின் வேகம் தாங்காமல் பொலிஸ் அதிகாரியின் கண்ணுக்குக் கீழ் பயங்கரமாக வீங்கிப் போனது.

பொலிஸ் அதிகாரியை தாக்கினால் அதுவும் முகத்தில் தாக்கினால் சும்மா விடுவார்களா? உடனே ஸ்பைடர் மேனை கைது செய்ததுடன் அவரை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தடுத்து வைத்துள்ளனர்.

இதே வேளை குறித்த பிரதேசத்தில் அதாவது ஸ்பைடர் மேன் பொலிஸ் அதிகாரியை குத்திய இடத்தில்.. அதுதாங்க இந்த டைம்ஸ் ஸ்கொயரில் விந்தை மனிதர்களின் விசித்திரத் தொல்லைகள் அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .