2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

குழந்தைக்கான தங்கக்கட்டில்

Super User   / 2014 ஜூலை 16 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


குழந்தைகளுக்கான சொகுசு கட்டிலொன்று தங்கத்தால் செய்யப்பட்டு தற்போது சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 24 கரட்டினால் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கட்டிலானது 188 கிலோ கிராமும் 114 சென்றிமீற்றர் உயரமும் கொண்டமைந்துள்ளது.
 
இதனை தயாரிக்க 6 மாத வேலை நாட்கள் தேவைப்பட்டுள்ளதாக சோமோ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இக்கட்டிலானது 10 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் என்று விலைக்குறிக்கப்பட்டு லண்டனிலில் உள்ள பிரபல விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே அதிக விலையுடைய இக்கட்டிலுக்கு டொடோ பெசிநெட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் உரிமையாளர் கடந்த 2005ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான தளபாடங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளார். ஆனாலும், அவருக்கு குழந்தையொன்றுக்கு தந்தையான பின்பே இக்கட்டிலை  வடிவமைத்ததாக அந்நிறுவனத்தின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"நவீன உலகில் பிறக்கும் குழந்தைகள் எதுவித மன உளைச்சலுமின்றி நல்ல ஒரு வழியில் வளர வேண்டும் என்பதற்காகவும் அவர்களை வளர்க்கும் தாய்மாருக்குள்ள வேலைப்பழு குறைய வேண்டும் என்பதற்காவே  இவ்வாறானதொரு படைப்பை சந்தைப்படுத்தியுள்ளோம்" என்று அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .