2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சிசுவை உருட்டிவிட்ட தாய்

Kogilavani   / 2014 ஜூலை 09 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


தாயொருவர் தனது பெண் சிசுவொன்றை அதிவேக புகையிரதமொன்றிலிருந்து நடைப்பாதைக்கு உருட்டி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிய+யோர்க், கொலம்பஸ் சேர்க்கிலின் புகையிரத நிலையத்தில் அதிவேக புகையிரதம் நிருத்தப்பட்டிருந்த போதே, பெண் சிசுவை குழந்தை இழுப்பெட்டியில் வைத்து தள்ளி விட்டு தப்பிச்சென்றதை கண்டதாக குழந்தையை காப்பாற்றிவர் பொலிஸாருக்கு சாட்சியம் அளித்துள்ளார்.

நிய+யோர்க் நகர பொலிஸார், குறித்த தாயை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 7 மாதக் சிசுவின் தாயை தேடும் நடவடிக்கையிலேயே பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்த குழந்தையை காப்பாற்றியவர் இது குறித்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளதாவது,

புகையிரதத்திலிருந்து நடைபாதைக்கு தனிமையாக இழுபெட்டி மூலம் சிசுவொன்று வேகமாக வந்ததை கண்டேன். அந்த சிசுவை புகையிரதத்திலிருந்த பெண்ணொருவரே தள்ளி விட்டார். அப்பெண்ணுக்கு சுமார் 20 தொடக்கம் 30 வயதிருக்கும்.

அவர் ஆபிரிக்கா அல்லது அமெரிக்காவை நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று அடையாளம் கண்டுகொண்டேன். நான் குறித்த சிசுவுடன் சுமார் 20 நிமிடங்கள் அங்கு இருந்தேன். ஆனால் அந்த சிசுவைத் தேடி யாருமே வரவில்லை என்பதினாலேயே பொலிஸில் முறைப்பாடு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மேற்படி சிசுவை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற பொலிஸார், அந்த சிசுவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று வைத்தியர்கள் தெரிவித்ததாக தெரிவித்தனர்.

குழந்தை பற்றியோ அல்லது தாயைப் பற்றிய விபரங்களோ தெரியாத நிலையில் குழந்தையின் அங்க அடையாளங்களை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .