2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வண்டியை கவிழ்த்த பூனை

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜீப் வண்டி ஒன்றின் அடிப்பாகத்திலுள்ள ஸ்பிரிங்கில் பூனையொன்று மாட்டிகொண்டதுடன், அந்த ஜீப் வண்டியில் சுமார் 50 மைல் தூரம் பயணித்த சம்பவமொன்று ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
 
விடலி போரனின் என்பவரினுடைய ஜீப் வண்டியின் அடிப்பாகத்தில் உள்ள  ஸ்பிரிங்கின் உள்ளேயே குறித்த பூனை மாட்டிகொண்டுள்ளது.
 
பின்னர் இப்பூனை வாகனம் திருத்துபவர்கள், தீயணைப்பு பிரிவினரின்  முயற்சியால் 3 மணித்தியாலத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து வாகனத்தின் உரிமையாளர் தெரிவித்த போது,
நான் எனது வர்த்தக தேவையொன்றிற்காகவே பயணமொன்றை மேற்கொள்ள தீர்மானித்தேன். வாகனத்தில் ஏறும்போது வாகனத்தின் அடிப்பாகத்தை நான் அவதானித்தேன்.

50 மைல் தூரத்தையும் ஒரு மணித்தியாலத்துக்கு 80 கிலோ மைல் வேகத்தில் கடந்தேன். பின்னர் வாகனத்தை பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் நிறுத்தி, பெற்றோல் நிரப்பிக்கொண்டிருக்கும்போது பூனை கத்தும் சத்தம் கேட்டது.

எனது வண்டியின் அடிப்பாகத்தில் இருந்துதான் சத்தம் வருகின்றது என்பதை உணர்ந்து பார்த்தபோதே, பூனையொன்று வண்டியின் அடிப்பாகத்தில் உள்ள ஸ்பிரிங்கில் மாட்டிக்கொண்டிருப்பதை கண்டேன்.

பின்னர் பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் உள்ளவர்களின் உதவியுடன் எப்படியாவது பூனையை வெளியிலெடுக்க முயற்சித்தும் அது பயனலிக்கவில்லை. பொலிஸ் மற்றும் தீயணைப்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், வண்டியை கவிழ்த்து குறித்த ஸ்பிரிங்கை கழற்றுவது தவிர வேறு வழியில்லை என்று அனைவரும் தெரிவித்த பின்னர், அனைவரின் உதவியுடனும் எனது வண்டி கவிழ்க்கப்பட்டு பூனை எவ்வித பாதிப்புமின்றி வெளியில் எடுக்கப்பட்டது  என்றார்.

தற்போது, அந்த பூனை பெட்டியொன்றினுள் போடப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பூனையின் உரிமையாளரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .