2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பணத்தை கொடுத்து பணியாளர்களை துரத்திய நிறுவனம்

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவில் உள்ள வீடியோ விளையாட்டு நிறுவனமொன்று தனது பழைய பணியாளர்கள் பலருக்கு தலா 25,000 டொலர்கள் வரை செலுத்தி வெளியேற்றியுள்ளது.

புதிய ஆட்சேர்ப்பிற்காகவே அந்நிறுவனம் இத்தகைய செயற்பாட்டில் ஈடுப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு ஒன்றிற்கு புதிய ஆட்சேர்ப்பை 60 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் அதனுடைய இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் தற்போது இடம்பெறும் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கும் நல்ல திறமை காணப்படுமாயின் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கும் மேலதிகமாக 10வீத மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

எங்களால் எமது பணியாளர்களை இழுத்து வெளியே போட முடியாது. அதனால்தான் இவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக இவ்வாறானதொரு சலுகையை வழங்கினோம்.

எமது நிறுவனத்தில் ஏற்கெனவே 800 பணியாளர்கள் வேலை செய்கின்றனர் என்று குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .