2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நாய்களுக்கான திருமண சேவை

Menaka Mookandi   / 2014 மே 21 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாய்களுக்கான திருமண சேவை ஒன்றை பெரு நாடு, லிமாவில் உள்ள தேவாலயமொன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தேவாலயத்தில் சுமார் 40 நாய்களுக்கு இதுவரை திருமணம் செய்யப்பட்டுள்ளது. 

தேவாலயத்திலிருந்து நாய்களின் உரிமையாளர்களுக்கு உத்தியோகப்பூர்வமாக திருமண அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டதன் பின்னரே நாய்கள் திருமணத்திற்காக அங்கரிக்கப்பட்டு அங்கு அழைத்துச் செல்லப்படுகின்றன.

திருமணத்தின்போது நாய்கள் அங்கரிக்கப்பட்ட நிலையில் ஒரு பெட்டியிலிருந்து வெளியில் எட்டிப்பார்த்தவாறு குரைத்த நிலையில் காணப்படுகின்றன.

இனிவரும் காலங்களில் திருமணம் முடித்த நாய்கள் இரண்டும் எவ்வித பிரச்சினையும் இன்றி சந்தோஷமாக இருக்க முடியும் என்று அங்கு வந்திருந்த ஒரு நாயின் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாய்களை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்கள் அதன்மீது பொறுப்பாக இருக்க வேண்டும் என்தற்கே இத்தகைய திருமண ஏற்பாடுகள் செய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் திருமணத்திற்காக மத அனுஷ்டானங்கள் செய்வதை கேள்வியுற்றுள்ளோம்.

அத்தகைய அனுஷ்டானங்களில் நாய்களும் பங்கேற்றுள்ளன. ஆனால்,  நாய்களுக்கான திருமண சேவையை கேள்விப்படுவது இதுவே முதல் தடவை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .