2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஜன்னலில் நின்று நிர்வாணமாக ஆடிய பெண்

Kogilavani   / 2014 மே 14 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்வாண கோலத்தில் பெண்ணொருவர் ஹோட்டலொன்றின் ஜன்னல் கண்ணாடிக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டி (AC) பெட்டியின் மீதேறி நடனமாடிய நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றது.

தென் சீனாவில் உள்ள லியூசோ நகரில் இருக்கும் பிரபல ஹோட்டல் ஒன்றில் ஒரு ஆணும், பெண்ணும் வாடகைக்கு அறை எடுத்துள்ளனர். 11 ஆவது மாடியில் அறை எடுத்த அவர்கள் இரவு நேரத்தை ஒன்றாக கழித்துள்ளனர்.

காலையில் அந்த ஆண் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பிறகு அந்த இளம்பெண் நிர்வாணமாக ஜன்னல் வழியாக வெளியே சென்று குளிரூட்டி பெட்டியில் ஏறிக்கொண்டார்.

பெண் ஒருவர் ஆடை இன்றி ஜன்னலில் அமர்ந்திருப்பதை பார்த்து அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. அவர்கள் அந்த பெண்ணை புகைப்படம் எடுக்கத் துவங்கினர்

இது குறித்து தகவல் அறிந்த பொலிஸாரும், தீயணைப்பு துறை வீரர்களும் அந்த பெண் தங்கியிருந்த அறைக்குள் வந்து அவரை உள்ளே வருமாறு கூறினர்.

பொலிஸார் அழைத்தவுடன் அந்த பெண் ஏ.சி. பெட்டி மீது ஏறி நடனம் ஆடினார். அவரை அறைக்குள் வருமாறு எவ்வளவோ கூறியும் அவர் கேட்கவில்லை.

பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணுக்கு ஒரு துண்டை கொடுத்து போர்த்திக் கொள்ளுமாறு கூறினார். 

ஹோட்டல் அறைகளை சுத்தம் செய்யும் தொழிலாளி அந்த அறைக்குள் வந்து பேச்சு கொடுத்தபோது அந்த பெண் பதில் கூறினார். அவர் அந்த பெண்ணை லாவகமாக பிடித்து இழுத்தார்.

கை,கால்களை உதறி அட்டகாசம் செய்த அந்த பெண்ணை பொலிஸார் அறைக்குள் இழுத்தனர்.

பின்னரே, அவர் போதைப் பொருள் உட்கொண்டு இவ்வாறு செய்தது தெரிய வந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .