2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

திருடிய காரிலே தூங்கியதால் மாட்டிகொண்ட திருடன்

Kogilavani   / 2014 மே 06 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருடிய காரொன்றிலே திருடன் ஒருவன் அசந்து தூங்கிவிட்டதால் பரிதாபகரமாக பொலிஸில் மாட்டிக்கொண்ட சம்பவமொன்று சைபீரியாவில் இடம்பெற்றுள்ளது.

ஜெகோம் டோக்யெவ் என்ற 32 வயது நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி திருடன் மதுபோதையில் செல்வந்தர் ஒருவரின் காலை திருடியதுடன் அக்காரிலே நன்கு உறங்கிவிட்டார். மறுநாள் காலை காரின் உரிமையாளர் தனது காரை திறந்து பார்த்தபோது அந்த காரில்  திருடன் உறங்கியவாறு காணப்பட்டுள்ளான்.

இதனைக்  கண்ட அந்நபர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியவுடன் பொலிஸார் குறித்த திருடனை கைதுசெய்தனர்.

 'இந்நபர் முதல்நாள் இரவு வீட்டிற்குச் செல்லாமல் நன்கு மது அருந்தியுள்ளார். தன்னிடம் இருந்த பணத்தை மதுபானம் வாங்கியதில் செலவிட்டுள்ளார். காரை செலுத்திகொண்டிருப்பதாக மதுபோதையில்  எண்ணியுள்ளார். ஆனால் அவர் காரை செலுத்தாமல் காரினுள்ளே தூங்கியதை உணரவில்லை' என பொலிஸ் பேச்சாளர் இஸ்லேவ் தெரிவித்துள்ளார்.

இதன்போது திருடன் காரின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளதாக அதனது உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

'நான் காரை நோக்கி வந்தபோது ஒருவர் காரினுள் உறங்கிக்கொண்டிருந்ததை அவதானித்தேன். கார் முழுதும் மதுபான நாற்றமடித்தது. காரின் கண்ணாடிகள் முழுதும் உடைந்து கிடந்தன' என காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேற்படி நபர் மீது மது பாவனை, திருட்டு குற்றச்சாட்டுகள் என்பன பதியப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .