2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கழுதைப்புலிக்கு ஆணுறுப்பை பறிகொடுத்த நபர்

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடலுறுப்புக்களை இழந்தால் பணக்காரனாக வரலாம் என்று ஒரு மந்திரவாதி கூறியதை நம்பிய ஒருவர், தனது ஆண்குறியை கழுதைப்புலிக்கு பறி கொடுத்த சம்பவம் சாம்பியாவில் இடம்பெற்றுள்ளது.

சாம்பியா, மாலாசி எனும் பிரதேசத்தை சேர்ந்;த சமான்ஜனி சுலூ என்ற நபரே கழுதை புலிக்கு தனது ஆணுறுப்பை பறிகொடுத்துள்ளார்.
இவர் தற்போது சிப்பாட்டா என்ற பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பணக்காரராக வேண்டும் என்ற  ஆசையில்; இவர் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார்.

உடல் பாகங்களில் ஏதாவது ஒன்றை இழந்தால் மாத்திரமே பணக்காரனாக வரலாம் என அந்த மந்திரவாதி கூறியுள்ளார்.

இதனை நம்பிய சமான்ஜனி ஒருநாள் அதிகாலை 4.00 மணியளவில் சிம்பாபியன் புதர் ஒன்றிற்கு நிர்வாணமாக சென்ற சமயத்தில் அங்கு வந்த கழுதைப்புலிக்கு தனது கால் விரல்களை உண்ண கொடுத்துள்ளார்.

எதிர்பாராத விதமாக காட்டுப்புலி அவரது ஆண்குறியையும் உண்டுவிட்டதாம். இதனை கண்ட பொலிஸார் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எனக்கு மந்திரவாதி உடலுறுப்புகளை எவ்வாறு இழப்பது என்று தெளிவாக கூறவில்லை. நான் எனது உடலில் முக்கிய பாகங்களை இழந்தாலும் இன்னும் பணக்காரனாக வேண்டுமென்றே  ஆசைப்படுகின்றன என சமான்ஜனி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவருடைய உடல் நிலை தற்போது தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவத்தை கேள்வியுற்ற வனவிலங்கு அதிகாரசபை அப்பிரதேசத்தில் கழுதைப்புலிகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .