2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மயில்களினால் மன அழுத்தத்துக்கு ஆளான தம்பதி

Kogilavani   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


தம்பதியொன்று மயில்களினால் மன அழுத்தத்துக்கு உள்ளான சம்பவமொன்று பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸின், தெற்கு பகுதி மார்செய்லைச் சேர்ந்த தம்பதியொன்றே இத்தகைய சம்பவத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மேற்படி நகரத்தின் மேயருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு மயிலொன்றை பரிசாக கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால், அந்த மயிலானது தனது ஜோடியுடன் மேயரின் வீட்டிற்கு அருகிலிருந்த பூங்காவிற்கு தப்பிச் சென்றுள்ளது.

மீண்டும் கண்டு பிடிக்கப்பட்ட அந்த மயில்கள் மார்ஷல் நகருக்கு வெளியேயுள்ள பண்ணையொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

குறித்த பண்ணைக்கு அருகில் தங்கியிருந்த மேற்படி தம்பதியினர் இந்த மயில்கள் எழுப்பும் சத்தத்தினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்திற்கு மேற்படி தம்பதியினர் ஆளாகியுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் குறித்த தம்பதி மேற்படி மயில்களுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. ஆனாலும், அத்தம்பதியினருக்கு இழப்பீட்டு தொகையாக  சொற்ப அளவு பணமே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .