2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நாய்குட்டியை காப்பாற்றிய வொட்கா

Kogilavani   / 2014 மார்ச் 10 , பி.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இரசாயனம் ஒன்றை (கூலன்) பருகிய நிலையில் உயிருக்கு போராடிய நாய் குட்டியொன்றுக்கு 700 மில்லி லீற்றர் வொட்கா கொடுத்து காப்பாற்றிய சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அவுஸ்திரேலியா, மெல்போர்னை சேர்ந்த ஜெஸ்டினா ரோஸ்வனி என்பவர் நாய்; குட்டியொன்றை வளர்த்து வந்துள்ளார்.

இந்நாய்க் குட்டியானது நீரென நினைத்து கராஜில் வைக்கப்பட்டிருந்த இராசாயனத்தை பருகியுள்ளது.

உயிருக்கு போராடிகொண்டிருந்த நாய் குட்டியை அதனது உரியைமாளர்  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பரிசோதனையின் பின்னர் உறைந்த நிலை நச்சுதிரவம் ஒன்றை உட்கொண்;டதால் சிறுநீரக செயலிலப்பு ஏற்பட கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாய்குட்டியை மது அருந்த வைப்பதே இதற்கு சிகிச்சை என கூறிய மருத்துவர்கள்; 700 மி.லீ மதுவை 2 நாட்களுக்கு குழாயின் மூலம் உட்செலுத்தியுள்ளனர்.

மதுபானமானது உறைந்த நிலையில் காணப்படும் இரசாயன பதார்த்தங்கள் மிருகங்களின் உடலுக்குள் செல்லாமல் தடுத்து அதனை வெளியேற்றும் தன்மை கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் நாய்குட்டி தான் உட்கொண்ட திரவத்தினை ஓர் குடிவெறியில் உள்ளவர்களை போல கக்கியதாக ஜெஸ்டினா ரோஸ்வனி மிகவும் ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .