2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மலசலக்கூடத்தை திருமணப் பரிசாக்கிய நபர்

Kogilavani   / 2014 மார்ச் 12 , மு.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


உல்லாசம் அனுபவிப்பதற்கு கடற்கரையை நோக்கி வருபவர்களுக்காக அமைத்துகொடுக்கப்பட்ட மலசலக்கூடத்தை நபரொருவர் விலைக்கு வாங்கி அதனை அழகிய வீடாக மாற்றி தனது மனைவிக்கு திருமண நாள் பரிசாக வழங்கியுள்ளார்.

பிரிட்டனைச்சேர்ந்த நிக் வில்லான் என்ற நபரே இத்தகைய பிரமாண்டமானத்தை தனது மனைவிக்கு பரிசாக்கியுள்ளார்.

பிரிட்டனின் சிரெங்கம் பகுதியிலுள்ள கடற்கரையில் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை அமைப்பதற்காக அவர் 85,000 ஸ்ரேலிங் பவுன்களை செலவிட்டுள்ளார்.  இதனை வடிவமைப்பதற்காக அவர் 3 வருடங்களை செலவிட்டுள்ளதுடன் அவ்வீட்டுக்கு 'த வீ ரீடிரிட்' என பெயரிட்டுள்ளார்.

இவ்வீட்டினுள் இரண்டு படுக்கையறைகள், ஒரு சமயலறை, தனி குளியலறை, கடற்கரை காட்சிகள் தெரியக்ககூடிய வகையிலான ஜன்னல்கள் என்பன மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

'இதனை கடந்த 2011 ஆம் ஆண்டே அவர் வாங்கினார். கடலுக்கு அண்மையில் இது அமையப்பெற்றிருப்பது எனக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்து. ஆரம்பத்தில் இது ஒரு மலசலக்கூடமாகவே இருந்தது. இதனை வைத்து நாம் என்ன செய்யபோகிறோம் என்று நான் அப்போது நினைத்தேன்' என விலனின் மனைவி (வயது 55) தெரிவித்துள்ளார். 

'ஆனால், தற்போது என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. வாங்குபோது இருந்ததைவிட பல முற்றுமுழுதாக இந்த வீடு மாற்றப்பட்டு விட்டது.  தற்போதுதான் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. வீட்டிலிருந்து பார்க்கும்போது இயற்கையை மிகவும் இரசிக்கக்கூடியதாக உள்ளது. இது உண்மையில் மிகச் சிறந்த திருமண பரிசென்றே கூறவேண்டும்' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

'அநேகமானவர்கள் இந்த வீட்டை வாடகைக்கு கேட்கின்றனர். அநேகமான நிறுவனங்களும் இந்த வீட்டை தமக்கு தரும்படி கேட்கின்றனர்' என விலன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இந்த வீட்டை உத்தியோகப்பூர்வமாக திறக்கவுள்ளனர். இந்நிலையில் அன்றைய தினம் இராணுவ வீரர்களுக்கு உதவுதற்கான நிதியை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை இவர்கள் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .