2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பிளாட்டினத்தை கண்வில்லைக்குள் செலுத்திய பெண்

Kogilavani   / 2014 மார்ச் 10 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


அழகுக்கலை சத்திரசிகிச்சைக்கூடாக பெண்ணொருவர் தனது கண்வில்லைக்குள்; இதயம் வடிவிலான பிளட்டினத்தை உள்வைத்த சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

கிரிஸ்டினா கொவலெவ்கயா என்ற 26 வயதுடை பெண்யே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

அப்பெண் இச்சிகிச்சைக்காக 3,000 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, இப்பெண்ணின் கண்வில்லைக்குள் 3.5 மில்லிமீற்றர் அளவிலான பிளாட்டினம் வைக்கப்பட்டுள்ளது.

'பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் பெண்ணாக தற்போது நான் உள்ளேன். எனது கண்களை நீண்ட காலத்திற்கு இவ்வாறு வைத்துகொள்ள வேண்டும். இந்த வடிவம் எனக்கு பிடித்துள்ளது. ஆனால் அதனை இடமாற்றம் செய்யும் எண்ணமும் உள்ளது' என ரஷ்ய பிரஜையான மேற்படி பெண் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்கள் ஒவ்வொருவரும் இவ்வாறான புதிய விடயங்களை முயற்சி செய்து பார்க்க வேண்டும். நான் எப்போதும் இராசியானவள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .