2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: குழந்தையை ஊசியேற்றி கொல்ல முயன்ற தந்தை

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு மாதக் குழந்தையை ஊசிகள் மூலம் கொல்ல முயன்ற தந்தையொருவருக்கு சீன நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த யின் ஜிய்கி என்ற நபருக்கே இத்தகைய தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபர், தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டே இத்தகைய செயலை செய்ய முயன்றுள்ளார்.

மனைவியின் நடத்தைமீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி பிரசவித்த இரண்டு மாதக் குழந்தை தன்னுடையது அல்ல என அந்நபர் கருதியுள்ளார். கோபத்தில், அக்குழந்தையின் உடலில் ஊசிகளை சொருகி உள்ளார்.

இதனால் குழந்தை வீரிட்டு அழத் தொடங்கியுள்ளது. குழந்தை அழுவதற்கு கணவரே காரணமென அறியாத அவரது மனைவி  உடனடியாக குழந்தையை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

மருத்துவமனையால் குழந்தைக்கு தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும் மார்பு உள்ளிட்ட இடங்களில் ஊசிகள் ஆழமாக பாதித்தால் குழந்தையின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டதுடன் பொலிஸ் விசாரணைகளின்போது தனது குற்றத்தை ஒப்புகொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்படி நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதேவேளை, டீ.என்.ஏ பரிசோதனையில் குழந்தையின் தந்தை யின் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .