2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

எச்.ஐ.வி.யை தேநீரூடாக கைதிகளுக்கு பரப்ப முயன்ற கைதி

Kogilavani   / 2013 டிசெம்பர் 23 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.ஐ.வி.தொற்றினால் பாதிக்கப்பட்ட கைதியொருவர் அதனை சக கைதிகளுக்கும் பரப்பும் நோக்கில் தனது இரத்தம் கலந்த தேநீரை 40 கைதிகளுக்கு பரிமாற முயன்ற சம்பவமொன்று டுபாயில் இடம்பெற்றுள்ளது.

கைதிகளுக்கு தேநீர் பரிமாறுவதற்காக சமையற்காரர் ஒருவர் தேநீர் வைக்கப்பட்ட வண்டியை கொண்டு சென்றுள்ளார். அதனை வழிமறித்த மேற்படி கைதி தன்னை சக கைதிகள் அச்சுறுத்துவதாகவும்  பொலிஸாருக்கு அதனை அறிவிக்கும்படியும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தேநீர் கொண்டுச்சென்ற வண்டியை பார்த்துகொள்ளும்படி கூறிவிட்டு சமையற்காரர் பொலிஸாரை அழைப்பதற்காக சென்றுள்ளார். சமையற்காரர் சென்று மறையும்வரை பார்த்திருந்த அக்கைதி உடனடியாக தனது கையை காயப்படுத்தியுள்ளதுடன் அதிலிருந்து வடிந்த இரதத்தை தேநீரில் கலந்துள்ளார்.

இவ்வாறு கைதி தேநீரில் இரத்தத்தை கலப்பதை அவதானித்த சமையற்காரர் உடனடியாக கைதியை தடுத்து நிறுத்தியதுடன் பொலிஸாரிடமும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் உடனடியாக தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்;. ஆனாலும் அவரை சிறை காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஏனையவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்றார் என்று மேற்படி கைதி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .