2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மாணவிக்கு முத்தம் கொடுத்த மாணவன் இடைநிறுத்தம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது சக மாணவிக்கு முத்தம்கொடுத்த 6 வயது மாணவனொருவர் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்திலுள்ள பாடாசாலையொன்றில் கற்று வந்த ஹன்டர் எல்டன் என்ற மாணவனே இவ்வாறு பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இவர், தன்னுடன் கற்கும் மாணவிக்கு கையில் முத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், மேற்படி மாணவின் பாடசாலையிலிருந்து இரண்டு நாளைக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சிறுவனின் இத்தகைய  செயல் பாலியல் அத்துமீறல் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து எல்டனின் தாய் ஜெனிபர் சான்டர்ஸ் கூறுகையில்,

எனது மகன் அந்த சிறுமிக்கு முத்தம் கொடுத்ததற்காக முன்பு ஒரு முறை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்;. தற்போது மீண்டும் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இதை பாலியல் அத்துமீறல் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 'பாலியல்' என்றால் என்ன என்று மகன் என்னிடம் கேட்கிறான் என்றார்.

எனக்கு அந்த சிறுமியை பிடித்திருக்கிறது. வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் அந்த சிறுமியின் கையில் முத்தம் கொடுத்தேன். இது தான் நடந்தது என அம்மாணவன் தெரிவித்துள்ளான்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .