2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பச்சை அவரை பொதியில் பாம்பின் தலை

Kogilavani   / 2013 நவம்பர் 27 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கறிக்காக விலை கொடுத்து வாங்கிய பச்சை அவரை பொதியில் பாம்பின் தலைப்பகுதி இருந்ததை கண்டு பெண்ணொருவர் அதிர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் அமெரிக்காவின் ஓரிஜியன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியில் வசித்துவரும் மிஸ்டி மோசர் என்ற பெண் பச்சை அவரையை விலைகொடுத்து வாங்கியுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்தவுடன் அதனை ஒரு கிண்ணத்தில் கொட்டியபோது அதில் அவரையுடன்  சேர்த்து பாம்பின் தலையும் விழுவதை கண்டு அதிர்ந்துள்ளார்.

'அவரையை கிண்ணத்தில் கொட்டிவிட்டு பார்க்கும்போது அதில் வாய், மூக்கு, சிறிய கண்கள் கொண்ட ஒரு தலைப்பகுதி மட்டும் கிடப்பதை அவதானித்தேன். பின்னர் அது பாம்பின் தலை என்பதை அறிந்துகொண்டேன்' என அந்தப் பெண் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .