2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தலை வடிவில் கேக்: அதர்ச்சியடைந்த மணமகன்

Kogilavani   / 2013 நவம்பர் 07 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


தலை வடிவில் தயாரிக்கப்பட்ட கேக்கை கண்டு மணமகன் ஒருவர் அதர்ச்சியடைந்த சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலம் ஒஸ்டினில் இடம்பெற்றுள்ள திருமண வைபவத்தின்போதே இவ்வாறு தலைவடிவில் தயாரிக்கப்பட்ட கேக் பரிமாறப்பட்டுள்ளது.

கேக் வடிவடிவமைப்பு கலைஞரான நடாலியா சிட்சேர்ப் (வயது 28) இந்த கேக்கை வடிவமைத்துள்ளார். இதற்காக அவர் 40 மணித்தியாலங்களை செலவிட்டுள்ளார்.

மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் தலைகள் வெட்டப்பட்ட நிலையில் இக் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. அவை வெள்ளை மட்டையொன்றின் மீது வைக்கப்பட்டுள்ளன. அதில் இரத்தம் வடிந்தோடுவது போன்று பார்வைக்கு மிகவும் குரூரமான முறையில் அந்த கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

'இந்த கேக் வடிவமைப்பு தொடர்பில் நான் ஒருவருக்கும் கூறவில்லை. இது மிகவும் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கை பார்த்தவுடன் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் அதர்ச்சியடைந்த அதேவேளை, மிகவும் ரசித்தும் பார்த்தனர்' என கேக் தொடர்பில் சிட்சேர்ப் தெரிவித்துள்ளார்.

தனது பாட்டி இந்த கேக்கை ரசித்து பார்க்கவில்லை என்றும் ஆனால் தத்ரூபமாக அந்த கேக் வடிவமைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் தன்னை பாராட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

'எனது கணவர் டேவிட் சிட்சேர்ப் (வயது 30)  பயங்கரமான திரைப்படங்களை மிகவும் ஆர்வத்துடன் பார்ப்பார். நானும் இவ்வாறான கேக்கொன்றை தயாரிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தேன். விசேடமாக முகத்துடன் கூடிய கேக்கை தயாரிக்கவேண்டும்' என்று நினைத்திருந்தேன்.

இந்த கேக்கை பார்த்து எனது கணவர் மிகவும் அருமையாக உள்ளதாக என்னை பாராட்டினார்' என அப்பெண் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .