2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வரி விலக்கை பெறுவதற்காக விவாகரத்து செய்யும் சீனர்கள்

Kogilavani   / 2013 நவம்பர் 07 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவாகரத்து செய்துகொண்ட தம்பதிகளுக்கு அரசு வழங்கும் சலுகையை பெற்றுகொள்வதற்காக அண்மைக்காலமாக சீனாவில் விவாகரத்து செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக அதர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

விவாகரத்து செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு சீனாவில் சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்வதாகவும் பின்னர் மீண்டும் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், சீனாவில் அண்மைக்காலமாக  விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரை மட்டும் 40 ஆயிரம் தம்பதிகள் தங்கள் திருமண பந்தத்தை முறித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சீனாவின், ஷாங்காய் நகரிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அங்கு விதிக்கப்பட்டுள்ள அதிக அளவிலான சொத்து வரி தான் என கூறப்படுகிறது.

சீனாவில், வீடு மற்றும் குடியிருப்புகளை விற்கும் தம்பதிகள் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 20 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

ஆனால், விவாகரத்து செய்யும் தம்பதிகளுக்கு இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்கும்போது அரசுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

இதனை பயன்படுத்தி கொள்வதற்காக விவகாரத்து என்ற புதிய உத்தியை சீன தம்பதிகள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு விவகாரத்து செய்து கொள்பவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற வசதியும் இங்கு காணப்படுகின்றது.

மேற்கூறிய காரணங்களால் சீனாவில் கடந்த 4 ஆண்டுகளை விட தற்போது விவகாரத்து அதிகரித்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, சீனாவில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால், அனைவரும் ஆண் குழந்தைகளை பெறவே விரும்புவதால், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதமும்; சீனாவில் மிகவும் குறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே, திருமணத்துக்கு பெண் கிடைப்பதிலும் இங்கு சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .