2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கடமை நேரத்தில் பாலியல் உறவு: அதிகாரிகள் இருவர் நீக்கம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடமை நேரத்தில் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் இடைநிறுத்தப்பட்ட சம்பவம் வேல்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

வேல்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள டைபெட் போவ்ஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இன்ஸ்பெக்டர் டியேன் டேவிஸ் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபில் டொமி ஸ்வோல்ஸ் ஆகிய இருவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கணவன் மனைவியான மேற்படி இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுகொண்டிருந்ததை ஏனைய அதிகாரிகள் கண்டுள்ளனர்.

இச்சம்பவத்தால் இடைநிறுத்தப்பட்ட டேவிஸ், வோல்ஸ் பொலிஸ் படையில் சிரேஷ்ட அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.

இதேவேளை, இவர் வோல்ஸ் நாட்டின் மத்திய பகுதி மற்றும் மேற்கு பகுதிகளில் கடமை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தவறான நடத்தை கோலத்தால் மேற்படி இருவரும் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .