2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நாயின் இரத்தத்தை செலுத்தி பூனையை காப்பாற்றிய மருத்துவர்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாயின் இரத்தத்தை செலுத்தி உயிருக்கு போராடிய பூனை ஒன்றை மருத்துவர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

இச்சம்பவம் நியூசிலாந்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நியூசிலாந்தின், தவுரங்கா பகுதியை சேர்ந்த கிம் எட்வர்ட்ஸ் என்பவர் தனது வீட்டு செல்லப்பிராணியாக பூணையொன்றை வளர்த்துவந்தார். ரோரி என்ற அழைக்கப்படும் இப்பூனை மீது கிம் அளாதி பிரியம் உடையவர்.

இந்நிலையில் எலிக்கு வைத்த விஷத்தை ரோரி துரதிஷ்டவசமாக உண்டுள்ளது.

விஷத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் துடித்த ரோரியை கிம் மருத்துவமனையில் அனுமதித்தார்.

விஷம் இரத்தத்தில் கலந்துவிட்டதால் ரோரியைக் காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.

இந்நிலையில், கிம் ரோரியை காப்பாற்றுமாரி கோரி கதறி அழுததை கண்ட மறுத்துவர் கேட் ஹெல்லெர், உடனடியாக தனது தோழி மிச்சேல் விட்மோருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிள்ட் ட்ரான்ஸ்ஃபியூசன் முறையில் ரோரியின் விஷம் கலந்த இரத்தத்தை வெளியேற்றிய கேட், அதேநேரத்தில் மிச்சேல் விட்மோரின் செல்ல நாயான லாப்ரடார் இன மேக்கியின் ரத்தத்தை ரோரியின் உடலில் செலுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரோரியை வழமையான நிலைக்கு திரும்பியுள்ளது.

உயிரியல் கோட்பாடுகளின்படி, நாயும் பூனையும் வெவ்வேறு விலங்கின குடும்ப வகைகளை சேர்ந்தவை.

அது மட்டுமின்றி, நாய் வகைகளில் கூட மனிதர்களுக்கு உள்ளது போல் இரத்த பிரிவுகள் (குரூப்கள்) உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், ரோரியை எப்படியாவது காப்பாற்றிக் கொடுத்து விடவேண்டும் என்ற வேகத்தில் அரியதொரு புதிய முயற்சியாக நாயின் ரத்தத்தை பூனைக்கு ஏற்றிய டாக்டர் கேட் ஹெல்லர் தன்னை அறியாமலேயே புதியதோர் சாதனை செய்துவிட்டார்.

மேக்கியின் ரத்ததானத்தால் உயிர் பிழைத்துள்ள ரோரி, தற்போது ஆரோக்கியமாக உள்ளதாம்.

You May Also Like

  Comments - 0

  • trhuwan funaid Monday, 26 August 2013 08:23 AM

    மிருகங்களுக்கு ஒத்துப்போகக்கூடிய இரத்தம் ஏன் மனிதர்களுக்கு ஒத்துப்போவதில்லை தெரியுமா? பிறப்பிலேயே பொறாமை பிடிச்சவகங்க, அதனாலதான் 4 குருப் இரத்தம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .