2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கணவருடன் உறங்கினால் ஆயுள் தண்டனை

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவருடன் உறங்கினால், ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று அவருடைய மனைவிக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இங்கிலாந்து நீதிமன்றமே இவ்வாறு எச்சரித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு, இங்கிலாந்தில் வசித்து வரும் ஒரு சீக்கிய குடும்பம் பற்றியதாகும்.

அக்குடும்பத்தில் 35 வயதான, ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் இருந்தார். அவருக்கு இந்தியாவில் பஞ்சாபில் மணப் பெண் பார்த்தனர். மணப்பெண், கால் முடமானவர்.

திருமணத்துக்காக, அந்த இளைஞன், இங்கிலாந்தில் இருந்து பஞ்சாபுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு அழைத்துச் செல்லப்பட்டார். தாலி கட்டுவதற்கு முன்பு, அவரை அப்பெண் பார்க்கவில்லை. தாலி கட்டிய பிறகுதான், தனது கணவர் இயல்பான மனிதர் அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டார். இருப்பினும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவருடன் வாழத் தொடங்கினார்.

திருமணத்துக்கு பிறகு, இருவரும் இங்கிலாந்து திரும்பினர். இங்கிலாந்து சட்டப்படி, 'உடலுறவுக்கு' சம்மதிக்கவோ, மறுக்கவோ இயலாத நிலையில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவரின் திருமணம் ரத்து செய்யப்படும். 

எனவே, இவர்களது திருமணத்தை ரத்து செய்யுமாறு பர்மிங்காமில் இதற்கென உள்ள விசேட நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு முறையிட்டது. அந்த இளைஞரை, மனநல மையத்தின் பராமரிப்புக்கு அனுப்பி வைத்தது.

ஆனால், தங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் நீதிபதி ஹோல்மன் விசித்திரமான தீர்ப்பு அளித்தார். அந்த வாலிபர், உடலுறவுக்கு உடன்படும் திறன் படைத்தவர் அல்ல என்று நீதிபதி குறிப்பிட்டார்.

எனவே, அவருடன் தூங்கி அவருடைய மனைவி எந்தவகையிலாவது பாலியல் ரீதியாக நெருக்கம் வைத்துக் கொண்டால், அந்த வாலிபர் குற்றச்செயலில் பாதிக்கப்பட்டவராகி விடுவார் என்றும், அதன் அடிப்படையில் அவருடைய மனைவிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றும் நீதிபதி கூறினார்.

அதே சமயத்தில், அந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்று, திருமணத்தை ரத்து செய்ய மறுத்து விட்டார். தனது துயரமான நிலைமையை மனவலிமை மற்றும் கண்ணியத்துடன் அப்பெண் தாங்கி வருவதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

'கணவருடன் தூங்கினால் ஆயுள் தண்டனை' என்று இங்கிலாந்தில் இதுபோன்று ஒரு நீதிபதி தீர்ப்பை அளித்திருப்பது. இதுவே முதல்தடவையாகும்.


You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Friday, 09 August 2013 03:08 PM

    ஆனால் சில பெண்களுக்கு தம் கணவனுடன் வாழ்வதே தண்டனைதான்...

    Reply : 0       0

    Chenaiyoor Nava Saturday, 10 August 2013 05:28 AM

    அந்தப்பெண்ணின் மனவலிமைக்கும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கும் உறுதுணையாய் இருந்த இறைவனுக்கு நன்றிகள்!! இருப்பினும் இறைவன் வெகுவிரைவில் அந்தக் கணவனின் உளம் மற்றும் உடல் ஆகியவற்றின் நிலையை நல்ல தேக ஆரோக்கியமும் மன நிலையைக் கொண்டவராகவும் மாற்றி வைப்பாராக!! ஆமீன்!!!

    Reply : 0       0

    parani Wednesday, 14 August 2013 04:59 AM

    திருமணம், கணவன், குழந்தை என்பதுதான் ஒரு பெண்ணின் வாழ்க்கை என நிர்ணயிக்கப்பட்ட இந்த சமூகத்தில் இப்பெண்ணின் இத்தகைய முடிவு விசித்திரமான ஒன்றல்ல...

    Reply : 0       0

    joy Thursday, 31 October 2013 03:00 PM

    கோட்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .