2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நபரின் ஆணுறுப்பை வெட்டிய பெண்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நபரின் ஆணுறுப்பை பெண்ணொருவர் கூரிய ஆயத்தததால் வெட்டிய சம்பவம் ஒன்று இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இத்தகைய செயலை செய்துள்ளாரென பாதிக்கபட்டவர்; பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஓரிசா, ஜகத்சிங்கபூரைச் சேர்ந்த பெண்ணொருவர் சம்பவ தினத்தன்று கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில் இருவர் அவரை பின்தொடர்ந்துள்ளனர். இடையில் வழிமறித்த அந்த இருவரும்  குறித்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து அருகில் இருந்து கோயிலுக்குள் நுழைந்துள்ளார்.

கோயிலுக்குள் நுழைந்தப் பின்னும்கூட அந்த பெண்ணை மேற்படி நபர்கள் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றுள்ளனர். இந்நிலையில் அப்பெண் கோயில் கிடந்த கூறிய ஆயத்தத்தால் அவர்களில் ஒருவரின் ஆணுறுப்பை  வெட்டியுள்ளார்.

இந்நிலையில் வலியால் துடித்த அந்தநபர் இரத்தவெள்ளத்தில் வைத்தியசாலையை நோக்கி ஓட்டமெடுத்துள்ளார். இதேவேளை மற்றைய நபரும் குறித்த நபரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து மேற்படி இரண்டு நபர்களும் இச்சம்பம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுவரை யாரும்

கைதுசெய்யப்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. (தட்ஸ் தமிழ்)

You May Also Like

  Comments - 0

  • VALLARASU. Wednesday, 14 August 2013 04:37 PM

    யக்கோ...? அந்த கூரிய ஆயுதத்தை எங்ககிட்ட தாக்கா... எங்கட‌ நாட்டில நடக்குற சிறுவர் துஸ்பிரயோகத்த இல்லாம செய்யப் போறேன்...

    Reply : 0       0

    trhuwan funaid Monday, 26 August 2013 08:42 AM

    ஆதாரபூர்வமாக குற்றவாளி யார் என்று தெரிந்த பின்பும் பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லையென்று சொல்லும்போது குற்றவாளியை கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும்.
    1.பொலிஸார் இவர் மீது கொலை முயற்சிக்காக‌ குற்றம் சுமத்தி இவரை உள்ளே தள்ளலாம்.
    2. குற்றவாளிகளும் இந்தப் பெண்ணை கொலை செய்யலாம்

    Reply : 0       0

    GOKULNATH Sunday, 22 September 2013 06:56 PM

    நல்லது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .