2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அரிய வகை செம்மறி ஆடுக்காக அதிர்ஷ்டத்தை துரத்திய விவசாயி

Kogilavani   / 2013 ஜூலை 02 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாயி ஒருவர் அரிய வகை செம்மறி ஆடு ஒன்றுக்காக தேடி வந்த அதிர்ஷ்டத்தை துரத்தியடித்த சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விவசாயி வளர்த்து வந்த செம்மறி ஆடு (கடா) 1 மில்லியன் சவூதி ரியாலுக்கு விலைபேசி வந்துள்ளது. மேற்படி விவசாயி செம்மறி ஆட்டை பெரிதாக கருதியதுடன் அதனை விலைபேசி வந்த ஒரு மில்லியன் பணத்தை வாங்க மறுத்துள்ளார்.  

சவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியை சேர்ந்த பாட் பின் கட்டப் என்ற விவசாயியே இத்தகை செயலை செய்துள்ளார்.

'நான் அரிய வகை செம்மறி ஆட்டை (கடா) வளர்த்து வந்தேன். அது ஒரு மில்லியன் சவூதி ரியாலுக்கு விலைபேசப்பட்டது. அந்த செம்மறி ஆடுக்காக விலை பேசி வந்த பணத்தை நான் வாங்க மறுத்தேன். ஏனெனில், இந்த ஆடை சவூதி, குவைத் மற்றும்  கட்டார் ஆகிய நாடுகளில் உள்ள ஏனைய விவசாயிகளின் பண்ணைகளில் விட்டு அப் பண்ணைகளில் உள்ள ஆடுகளை பால் சுரக்கச் செய்யும்போது ஒருதொகை பணம் எனக்கு கிடைக்கின்றது' என இதற்கு அவ் விவசாயி காரணம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .