2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அலுவலக சுழல் கதிரை ஓட்டப் போட்டி

Kogilavani   / 2013 ஜூன் 04 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


அலுவலக சுழல் கதிரை ஓட்டப் போட்டியில் நத்தார் தாத்தா உடையணிந்த ஒருவர் முதலிடத்தை பெற்றுகொண்டுள்ளார்.

விசித்திரமான இந்த போட்டியானது டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹகனில் ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வருகின்றது.

இப்போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்கள் அலுவலகங்களில் உள்ள சுழல் கதிரைகளை  பள்ளத்தை நோக்கி செலுத்திகொண்டு செல்லவேண்டும் என்பதே போட்டி விதிமுறையாகும்.

இதேவேளை பங்குபற்றுனர்கள் போட்டியில் பங்குபற்றும்போது கீழே விழுந்து காயங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக தற்காப்பு கவசங்களை அணிந்துகொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் பங்குபற்றிய அநேகமானோர் விநோதமான ஆடைகளை அணிந்தவாறே இப்போட்டியில் பங்குபற்றுவர்.

இந்த ஆண்டு இடம்பெற்ற இப்போட்டியில் 24 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இவர்களில் நத்தார் தாத்தா உடையணிந்திருந்த ஒருவரே முதலிடத்தை பெற்றுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .