2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தாய்ப் பாலில் தேநீர் தயாரிக்கும் பெண்

Kogilavani   / 2013 மே 29 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவர், தாய்ப் பாலில் தேநீர் தயாரிக்கும் விநோத செயற்பாடு குறித்து ஊடகமொன்றுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும் பாடகியுமான மைலின் கிலாஸ் என்ற 35 வயது பெண்ணே இவ்வாறு செய்துள்ளார்.

'எனது தந்தை தாய்ப் பாலில் தேநீர் தயாரிக்கப்படுவதையே அதிகம் விரும்பவார். இதனால், இதனை நான் ஒரு குடும்ப பாரம்பறியமாக பின்பற்றி வருகின்றேன்'  என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தாய்ப் பாலினூடாக தயாரித்த தேநீரை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு வழங்கியுள்ளதாக அவர் ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இப்பெண்ணின் தந்தை ஒரு இராணுவ வீரர். ஒஸ்கார் கிலாஸ் என்று அழைக்கப்படும் இவர்  தேநீரை தயாரிப்பதற்காக தனது மனைவியிடமிருந்து பாலை பெற்றுகொண்டுள்ளார்.

'இது சாதாரண செயற்பாடு. இதனை எல்லோருக்கும் முயற்சித்து பார்க்க வேண்டும். ஏனைய பானங்களைவிட தாய்ப் பாலில் தயாரிக்கப்படும் தேநீரானது மிகவும் சுவையானது.

நான் இதனை அறிந்துகொண்டே வளர்ந்தேன். அதனால், இது விநோதமானது அல்ல. நாங்கள் அன்பான குடும்பம் என்பதனை நீங்கள் தற்போது அறிந்திருப்பீர்கள்' என்று அப் பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .