2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஆண் குழந்தைகள் இல்லாவிட்டால் நரகம்: பழங்குடியினரின் நம்பிக்கை

Kogilavani   / 2013 ஏப்ரல் 08 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆண் குழந்தைகள் இல்லாவிட்டால் தமக்கு சுவர்க்கம் கிடைக்காது என்ற மூட நம்பிக்கையில், ஆந்திராவில் ஒரு பழங்குடி மக்கள் பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர்.

ஆந்திராவில், போலப்பள்ளியைச் சேர்ந்த காதிதந்தா என்ற பழங்குடி மக்களே இத்தகைய நம்பிக்கையை கொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுக்கும்வரை இப்பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்வதில்லை என்றும் இதனால், சிலருக்கு 11 பெண் குழந்தைகளுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்த சம்பவங்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆண் குழந்தைகள்  வேண்டும் என்பதற்காக சில ஆண்கள் மறுமணம் செய்துகொண்ட சம்பவங்களும் இக்கிராமத்தில் காண்படுகின்றது.

கிட்டத்தட்ட இவ்வூரில் 30 குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் தலா குறைந்தபட்சம் 11 பெண் குழந்தைகள் காணப்படுகின்றது.

நரகத்தின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க, கட்டாயம் ஆண் வாரிசு வேண்டும் என்பதே இவர்களின் தீவிர நம்பிக்கையாக காணப்படுகின்றது.

கடந்த இருபது ஆண்டுகளாகத் தான் இந்த நம்பிக்கை அதிகமாக உள்ளதாம். போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக நம்பப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .